பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சென்னை தினசரிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக் கிரு.ர். அவர் எழுதியிருக்கும் கருத்து பின் வருமாறு: பி. ஐ. எஸ். என். வெள்ளை கம்பெனியாருக்குப் போட்டியாக ஏற்பட்டிருக்கும் சி, வ. கம்பெனியாரை பலவாருக இம்சிக்க நிச்சயம் பண்ணிவிட்டாரென்று தெரிகிறது. வெள்ளைக் கம்பெனியார் சுதேசிய கம்பெனி யாரின் படகின்மேல் தமது படகை வேண்டுமென்று மோதவிட்டார்கள் என்பதாக சி. வ. கம்பெனியார் சப் மாஜிஸ்டிரேட் முன்பு பிராது கொண்டு வந்தார்கள். அதன் பேரில் மிஸ்டரி வாலர் மேற்படி பிராதை தமக்கு நேராக அனுப்பி விடும்படி சப் மாஜிஸ்டிரேட்டுக்கு உத்தரவு அனுப்பியிருக்கிருர். இது சாதாரண நடவடிக்கை முறைகளுக்கு முற்றிலும் விரோதமானது. மேலும் அந்தப் பிராது இவரிடம் விசாரணைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. இவர் இதுவரை ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்து வருகிருர். இத்தோடு நிற்கவில்லை. சி. வ. கம்பெனியார் பிராது விஷயமாக விசாரணைகள் நடத்தும்படி ஜில்லா போலீஸ் தலைவரிட மிருந்து உத்தரவு பெற்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை மிஸ்டர் வாலர் அழைத்து "நீர் இந்த விஷயத்தில் யாதொன்றும் செய்ய வேண்டியதில்லை. எல்லாம் நானே நடத்திக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டார்...... போலீஸ் ஸ்டேஷன் ஆபீசராகிய குருநாத அய்யர் என்பவரைத் தருவித்து 'நீர் சுதேசிய முயற்சியிலே அநுதாபங் கொண்டிருப்பதாகக் கேள்விப் படுகிறேன். உம்மை தூத்துக்குடியிலிருந்து அப்புறப் படுத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்கிறேன். போம்!” என்று பயமுறுத்தி அனுப்பினர். இவர் இப்படி செய்த சில தினங்களுக்கெல்லாம் மேற்படி ஸ்டேஷன் ஆபீசரே குலசேகர பட்டணத்துக்குப் போய்விட வேண்டும் என்று