பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 உத்தரவு வந்து விட்டது. இனி வாலர் என்னென்ன அற்புதங்கள் செய்யப் போகிருர் என்று அறியோம்....... தூத்துக்குடியில் மிஸ்டர் வாலர் மேற்கண்டவாறெல்லாம் செய்துவருவது வாஸ்தவமால்ை இதை கவர்ன்மெண்டார் உடனே விசாரணை செய்ய வேண்டும். விசாரணை செய்து தக்க ஏற்பாடுகள் செய்ய மறந்து விடுவார்களானல் பெரிய விபத்துக்கள் நேரிடக் கூடும்." இவ்வாறு எழுதினர் பாரதியார். எஸ்ஸாஜி டாஜ்பாய் என்பவர் பம்பாயிலே பெரிய கப்பல் வியாபாரி, இவருடைய கப்பல் கம்பெனிக்கு "ஷாலைன் ஸ்டீமர்" கம்பெனி என்று பெயர். தூத்துக்குடி சுதேசிக் கப்பல் கம்பெனியாராகிய சி. வ. கம்பெனியார் மேற்குறித்த ஷா லை ன் முதலாளியான எஸ்ஸாஜி டாஜ்பாயுடன் ஒர் ஒப்பந்தம் செய்துகொண்டு கப்பல் வியாபாரம் செய்து வந்தார்கள். அதன்படி எஸ்ஸாஜி டாஜ்பாயின் ஷாலைன் ஸ்டீமர் கம்பெனி சி. வ. கம்பெனிக் குச் சில கப்பல்களை வாடகைக்குக் கொடுத்து உதவியது. இது கண்டு ஆத்திரங்கொண்ட வெள்ளைக் கம்பெனி என்ன செய்தது? சி. வ. கம்பெனிக்குக் கப்பல் கொடுத்து உதவக் கூடாது' என்று ஷாலைன் ஸ்டீமர் கம்பெனியைத் தடுத்துவிட்டது. இந்தியா-(21- 6. 1906) 1906ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ந்தேதி வெளி வந்த இந்தியா’ பத்திரிகையிலே இது குறித்துப் பின் வருமாறு எழுதினர் பாரதியாt; 'துரத்துக்குடியிலே சுதேசியத்திற்குப் புதிது புதிதாக விரோதிகள் கிளம்பிக்கொண்டே இருக்கிருர்கள். யார் யார் என்ன செய்தபோதிலும் சிறிதேனும் சலிப்பில் லாமலும் சுதேசியக் கொடியைச் சற்றேனும் தாழ்த்தா