பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 பற்றியும் பிறரை நம்பியிருக்கக் கூடாது. பிற கம்பெனி களின் ஸ்டீமர்களை வாடகைக்கு வாங்கக் கூடாது, நமது சொந்தமாகவே ஸ்டீமர்களை விலைகொடுத்து வாங்க வேண்டும்” என்று உறுதி பூண்டார்கள். அந்த உறுதியின் விளைவே சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி' 'சுதேசி ஸ்டீம்நாவிகேஷன் கம்பெனி'யானது 1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ந்தேதி, இந்தியக்கம்பெனிச் சட்டத்தின்படி ப தி வு செய்யப்பட்டது. மேற்படி கம்பெனியின் பதிவு செய்யப்பட்ட காரியாலயம் தூத்துக் குடி கிரேட்காட்டன் ரோடில் 85ம் நெ. உள்ள கட்டிடத் தில் இருந்தது. கம்பெனியின் மூலதனம் பத்துலட்சம் ரூபாய். பங்கு ஒன்று 25 ரூபாய் வீதம், நாற்பதாயிரம் பங்குகள் கொண்டது மேற்படி கம்பெனி. மதுரைத் தமிழ்ச் சங்க த் தி ன் தலைவரும், பாலவநத்தம் ஜமீந்தாருமாகிய ரீ. பாண்டித்துரைத் தேவர் இந்தக் கம்பெனியின் தலைவரும், செயலாளரும் ஆவார். கம்பெனியின் டைரக்டர் போtடில் கீழ்க்கண்ட. வர்கள் இருந்தார்கள்: எஸ். வி. நல்ல பெருமாள் பிள்ளை ஏ. எம். எம். அருணசலம் பிள்ளை எஸ்.எஸ். வி. கிருஷ்ணபிள்ளை எஸ். டி. ஆ. ஆறுமுகம் பிள்ளை. ஏ. எஸ். வி. வேலாயுதம் பிள்ளை & I 2 3 4. பி. வெங்கடராமாநுஜம் நாயுடு 5 6