பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 கிருஷ்ணன் நாயர் அவர்கள் 1920ல் சென்னை அரசாங்கத்தில் சட்ட அங்கத்தினராக விளங்கினர். கே. ஆர். குருசாமி அய்யர் அந்தக் காலத்திலேயே புகழ் பெற்ற அரசியல்வாதி, பொது வாழ்வில் பங்கு கொண்டவர், நிதானக் கட்சியினர்; மிதவாதி. பம்பாய் வியாபாரியாகிய ஹாஜி முகம்மத் பக்கீர் சேட் என்பவர் இரண்டு லட்சம்ரூபாய் கொடுத்து மேற்படி கம்பெனியில் எட்டாயிரம் பங்குகள் வாங்கிக்கொண்டார். கம்பெனி வே க ம க ச் செயல்புரிவதற்கு இத் தொகையே மூலதனமாயிற்று. பாண்டித்துரைத் தேவர் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து இரண்டாயிரம் பங்குகள் வாங்கிக் கொண்டார். பாரதியாரின் தூண்டுதலின் மீது இந்தியா பத்திரிகை உரிமையாளராகிய மண்டயம் குடும்பத்தினர் எழுபதா யிரம் ரூபாய்க்குப் பங்குகள் வாங்கினர். 1906ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ந்தேதி இந்தியா' பத்திரிகையில் பாரதியார் எழுதினர். 'துரத்துக்குடியிலே சுதேசிய முயற்சியை மேற்கொண்டு நடத்திவரும் நம்மவர்கள் இப்போது 'சுதேசிய ஸ்டீமர் கம்பெனி' என ஒன்று ஸ்தாபிக்கக் கருதியிருப்பதாக முன்னமே அறிவித்திருக்கிருேம். இப்போது அந்தக் கம்பெனியின் ஆரம்பப் பிராயத்தனங்கள் தொடங்கி விட்டன. ...... இந்தக் கம்பெனியில் பங்குகள் எடுத்துக் கொள்வோரெல்லாம் இந்தியர்களாகவாவது, பர்மா தேசத் தவராகவாவது, இலங்கைத் தீவினராகவாவது அல்லது ஜப்பானியர்களாகவாவது இருக்க வேண்டும். பங்குகளில் 8000 பங்குகள் ஹாஜி மகமத் பஷிரி ஷெய்ட் அண்டு சன்ஸ் எடுத்துக் கொண்டதாகத் தெரியவருகிறது,