பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாக்கியிருக்கும் பங்குகளில் டைரக்டர்கள் இரண்டாயிரம் பங்குகள் எடுத்துக் கொண்டால் பாக்கி 10, 000 பங்குகள் தானிருக்கின்றன. இவற்றில் நம்மவர்களில் அநேகர் பங்குகள் எடுத்துக் கொள்வார்கள் என்பதில் சந்தேக மில்லை. இதனை வற்புறுத்திய தேசாபிமானிகள் சிறிதேனும் புறங்காட்டாமல் தைரியத்துடன் முன் சென்று நம் காரியத்தைச் செய்து முடிப்பார்கள் என்று நம்புகிருேம்." கம்பெனிக்கு வேண்டிய கப்பல்கள் வாங்கும் பொருட்டு அரிய முயற்சிகள் மேற்கொண்டார் வ. உ. சி. அம்முயற்சியில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் பல. அந்த இடையூறுகளை எல்லாம் வென்று புறமுதுகிடச் செய்து வாகைசூடினர் வ. உ. சி. இதுபற்றி பாரதியார் என்ன கூறினர்? 'துரத்துக்குடியைத் தென்னிந்தியாவின் பாரீஸால் என்று கூறலாம். அதிலும் முக்கியமாக பூரீ. வி. ஒ. சிதம்பரம் பிள்ளை சுதேசியத்தின் பொருட்டு எடுத்து வரும் முயற்சிகள் மிகவும் வியந்து போற்றுதற்குரியன. ஸ்டீமர்கள் விலைக்கு வாங்குவதிலே ஆரம்பத்தில் மேற் கூறப்பட்டிருக்கும் கம்பெனியாருக்குச் சிறிது சிரமம் ஏற்பட்டது, மேற்படி கம்பெனியின் துணைக்காரியதரிசி யாகிய பூர். வி. ஒ. சிதம்பரம்பிள்ளை எவ்வளவு சிரமம் கொண்டேனும் கப்பல்கள் வாங்காமல் திரும்புவது கிடை யாது என்று மனவுறுதியுடன் பம்பாய்க்குப் புறப்பட்டன ராம். கடைசியாக இவர் மனநோக்கம் நிறைவேறி விட்டது பற்றி மிகவும் சந்தோஷ மடைகிருேம். சென்னை கதேசமித்திரன்’ பத்திரிகைக்கு பூரீ. சிதம்பரம் பிள்ளை பின்வருமாறு எழுதியிருக்கிருர் : நமது சுதேசிய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிமிடெட்டுக்குச் சென்ற டிசம்பர் மாதம் 22-ந் தேதியில்