பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் மகாகவி பாரதியார் வளர்கிருt; தமிழ் நாட்டின் தென் கோடியிலே பிறந்த பாரதியார் இன்று இமயம் வரை வளர்ந்து விட்டார்; உயர்ந்து விட்டார்: ஓங்கிவிட்டார். பம்பாயிலிருந்து கல்கத்தா வரை பஞ்சாபிலிருந்து சன்னியாகுமரி வரை அவரது புகழ் பரந்து விரிந்து விட் டது. இந்திய நாட்டின்-புத்துயிர் பெற்ற பாரதத்தின்மாபெரும் கவிகளில் ஒருவராக அவர் போற்றப்பெறுகிருt; பாராட்டப் பெறுகிருர்: வணங்கப் படுகிருர்: வாழ்த்தப் படுகிரு.ர். காரணம் என்ன இருபதாம் நூற்ருண்டின் துெ.ாடக்கத்திலே இந்த நாட்டு மக்கள் உள்ளத்திலே எழுந்த விடுதலை உணர்ச்சியின் தூதுவராக அவர் தோன்றினர். அந்த உணர்ச்சியின கொந்தளிப்பாக அவர் கொதித்துக் குமிழி யிட்டார்: குரலாக ஒலித்தார்; போர்க் குரலாக முழங் கினர். நன்றி மறவாத இந்திய மக்கள் அவரைத் தம் இதயக் கோயிலிலே வைத்துக் கும்பிடுகிருர்கள்: வணங்குகிருர்கள். எனவே மகாகவி பாரதியார் வளர்கிருர்: வாழ்கிருt. அவர் வாழ்க! வளர்க! அவர் தம் புகழ் ஓங்குக! மேலும் மேலும் ஓங்குக!