பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கிரையத்துக்கு வாங்கப் பெற்ற ஸ்டீமர், நிகழும் ஜனவரி மாதத்தில் துரத்துக்குடி வந்து சேருமென்று சுதேச பத்திரி கைகளில் கூறியிருந்தோம். ஆனல் ஸ்டீமரின் சொந்தக் காரர் ஸ்டீமரைப் புதுப்பித்து நமக்கு அனுப்ப வேண்டு மெனக் கருதி, ஸ்டீமரை செப்பனிடும் கலத்திற்கனுப்பி, ஸ்டீமரில் சில வேலைகள் செய்யும் நிமித்தமாக ஸ்டீமர் முன் குறித்த தேதியில் ஐரோப்பாவைவிட்டுப் புறப்படவில்லை. இப்பொழுது ஸ்டீமரின் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன என்றும், ஸ்டீமர் வருகிற பிப்ரவரி மாதம் 4-ந் தேதியில் ஐரோப்பாவிலிருந்து புறப்பட்டு பிப்ரவரி மாதம் முடிவுக்குள் பம்பாய்க்கு வந்து சேரும் என்றும் தந்திகளும் நிருபங்களும் வந்திருக்கின்றன. நிகழும் ஜனவரி மாதம் 24-ந் தேதியில் கிரையத்துக்கு வாங்கப் பெற்ற ஸ்டீமரும், இன்னும் இரண்டு தினங்களில் கிரையத்துக்கு வாங்கப் பெறும் ஸ்டீம் லாஞ்சுகளும் பிப்ரவரி மாதம் 10-ந் தேதிக்குள் ஐரோப்பாவை விட்டுப் புறப்பட்டு பிப்ரவரி மாதம் முடிவுக்குள் பம்பாய் வந்து சேரும்: ......இன்னும் சில தினங்களில் ஸ்டீமர்கள் ஸ்டீம் லாஞ்சுகள் சம்பந்த மான யாவற்றையும் நமது மித்திரனில் வெளிப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கிருேம். (இந்தியா-2-2-1907) இதற்குப் பிறகு என்ன ஆயிற்று? வந்தே மாதரம்' கொடி பறக்க விட்டு வந்து சேர்ந்தது சுதேசிக் கப்பல். "இந்தியா' பத்திரிகையிலே ஒரு சித்திரம் போட்டு வெளியிட்டார் பாரதியார். 'வந்தே மாதரம்' என்று எழுதப்பட்ட கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு வருகிறது சுதேசிக் கப்பல். துர்த்துக்குடி மக்கள் மகிழ்ச்சி யுடன் அதை வரவேற்கிருர்கள். (இந்தியா-27-5-1907)