பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 'சூரத்தில் ந ட க் கி ற காங்கிரசுக்கு நாங்கள் எல்லோரும் இவ்விடமிருந்து நாளது டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் ரிசர்வ் வண்டிகள் மூல மாகச் செல்லுகிறபடியால் இந்த ராஜதானியிலிருந்து காங் கிரசுக்குச் செல்லும் பிரதிநிதி (டெலிகேட்)களும் பார்ப் பவர்களும் (விசிட்டர்) இது பார்த்தவுடன் அவர்கள் புறப் படும் விவரத்தைத் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் தெரு 87-ம் நெம்பர் சுதேசிய கிருகத்தாருக்குத் தெரி விக்கும் படிக்கும், நாளது மாதம் 20-ந் தேதி காலையில் மேற்படி கிருகத்திற்கு வந்து சேரும் படிக்கும் கேட்டுக் கொள்கிருேம்." சி. சுப்ரமணிய பாரதி ஆயிரத்துத் தொளாயிரத்து ஏழாம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் மேற் கண்டவாறு ஒர் அறிக்கை வெளியிட்டார் பாரதியார். இரண்டு நாட்களுக்குப் பிறகு 19-12-1907 'சுதேச மித்திர"னில் மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டார். அது வருமாறு : 'இதற்கு முந்திய நோட்டீஸ் 17-ந் தேதி சுதேச மித்திரனில் போட்டதிலிருந்து அநேக நாஷனிலிஸ்டு டெலிகேட்டுகள் சென்னைக்கு சனிக்கிழமையன்று வந்து அன்று சா ய ந் தி ரமே சூரத்துக்குப் புறப்பட்டுப் போகக் கூடுமென்று தெரிவித்திருக்கிரு.ர்கள். ஆகையால் இந்த மாகாணத்திலிருந்து போகும் நாஷனலிஸ்டு டெலிகேட்டுகளுக்கு நாம் தெரிவிக்கிறது என்னவென்ருல் நாம் காங்கிரசுக்கு இரண்டு பிரிவாகப் போக வேண்டியிருக்கிறது. அதாவது நாளை 20-ந் தேதி சாயந்திரம் போகிறவர்கள் ஒரு பிரிவு: 21-ந் தேதி சாயந் திரம் போகிறவர்கள் ஒரு பிரிவு. டெலிகேட்டுகளோ