பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விசிட்டர்களோ தங்கள் விருப்பத்தை 87 துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு திருவல்லிக்கேணி சென்னை, சுதேச கிருகத்திற்குத் தெரிவித்தால் எந்தப் பிரிவோடும் போகலாம்.' சி. சுப்பிரமணிய பாரதி. இதன்படி, 20-ந் தேதி ஒரு பிரிவினரை அனுப்பிவிட்டு, மற்ருெரு பிரிவினரை 21-ந் தேதி அழைத்துக் கொண்டு சூரத் காங்கிரகக்குச் சென்ருர் பாரதி. சூரத் காங்கிரசுக்குப் போய் வந்தபின் காங்கிரசில் என்ன நடந்தது? எப்படி நடந்தது? ஏன் அப்படி நடந்தது என்பன போன்ற விஷயங்களே எல்லாம் விளக்கி ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார் பாரதி. சூரத்தில் நடைபெற்ற அமளியை இவ்வளவு தெளிவாக இவ்வளவு விரிவாக-எவர் மீதும் எவ்விதமான காழ்ப்பும் இன்றி இதுவரை எவருமே வெளியிட்டார் அல்லர். காங்கிரஸ் வரலாற்றிலேகூட இத்தகைய விரிவுரையை நாம் காணல் இயலவில்லை. அந்த அரசியல் கொந்தளிப்பை மிகவும் நிதானமாகச் சுவைபடச் சொல்கிருர் பாரதியார். கவியுள்ளம் படைத்த ஒருவன் ஒர் அரசியல் நிகழ்ச்சி யை எவ்வாறு விவரிக்கிருன் என்பதற்கு இதுவே எடுத்துக் காட்டு. எங்கள் காங்கிரஸ் யாத்திரை' என்ற தலைப்பில் அந்தத் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார் பாரதியார். அதை இப்போது காண்போம்.