பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பார்வைகளாலும், கைலாகுகளாலும், வந்தனங்களாலும், எங்களை வாழ்த்துக் கூறி அனுப்பிய காலத்தில் இவ்வளவு விசுவாசமும் உண்மை நிலையும் வாலிபர்கள் பெற்றிருப்பது பாரத ஜாதிக்கு rேம காலம் வந்து விட்ட தென்பதற்கு ஒர் நல்லடையாள மென்று எங்களுக்குத் தோன்றியது. ட்ரெயின் புறப்பட்டது. ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் நம்மவர்கள் 'வந்தே மாதர முழக்கம் இடைவிடாது நடத்தி வந்தார்கள். எங்களுக்கு வேண்டிய ஆகார முதலிய சவுகரியங்கள் எல்லாம் வழி ஸ்டேஷன்களிலே பல தேசாபிமானிகளால் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன. ஒர் இரவும் ஒரு பகலும் கழிய மறு இரவிலே சுமார் பத்து மணிக்கு புளு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். புன நகரம்தான் புதிய கட்சியாருடைய காசி rேத்திரம். புன நகரத்து ஸ்டேஷனில் எங்களை வந்து சந்திக்க வேண்டு மென்று சித்திர சாலைத் தலைவராகிய பூரீ. வி. ஜி. ஜோஷிக்குத் தந்தி கொடுத்திருந்தோம். சில தினங்களின் முன்பாகவே பூரீ, ஜோஷி அவ்வூரிலிருந்து பம்பாய்க்குப் புறப்பட்டு விட்டாராகையால் அவருக்கு எங்கள் தந்தியே கிடைக்கவில்லை. ஆயினும் வேறு பல மகாராஷ்ட்ரர்கள் வந்து ஸ்டேஷனிலிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நாங்கள் திலகருடைய கட்சியார் என்று கேள்வியுற்ற உடனே மிகுந்த சந்தோஷமடைந்தவர்களாய் எங்களிடம் குசல விசாரணைகள் புரிந்து எங்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பினர்கள். திங்கட்கிழமை காலை பம்பாய் நகரத்தில் வந்திறங்கினேம். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே உள்ள "ஸர்தார் கிருஹம் என்ற ஒரு வசதியிலே கொண்டு எங்களை வி. ஒ. சிதம்பரம் பிள்ளை இறக்கிவிட்டார். அவர் வியாபார சம்பந்தமாக அடிக்கடி பம்பாய்க்கு வந்து பழக்க முடையவராதலால் எங்களுக்குக் காண்பித்த வசதி மிகவும் நல்லதாக அமைந்திருந்தது. நாங்க்ள் அங்கே