பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 உயிரினங்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ந்த அறிஞர் கள் என்ன சொல்கிரு.ர்கள்? போராட்டமே வளர்ச்சிக்குக் காரணம் என்று சொல்கிரு.ர்கள். ஆம்: போராட்டமே வளர்ச்சிக்குக் காரணம். போராட்டம் இன்றேல் வளர்ச்சி இல்லை. போராட்டத்தின் மூலமே உயிரினங்கள் வளர் கின்றன. போராட்டத்தின் மூலமே மனித சமுதாயம் வளர்ந்து வந்துளது; போராட்டமே வளர்ச்சிக்கு வழி. போராட்டம் இன்றேல் வளர்ச்சி இல்லை. மகாகவி பாரதியார் இந்திய நாட்டின் விடுதலைக்கும் போராடினர்: நாட்டு மக்களை ஏழ்மையினின்றும் மீட்கப் போராடினர்; அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடினர்; அநீதியை ஒழிக்கப் போராடினர். இந் நிலவுலகில் முப்பத்தி ஒன்பதே ஆண்டுகள் அவர் வாழ்ந்தார். வாழ்நாள் முழுவதும் போராட்டமே! போராட்டம் போராட்டம்! ஓயாத போராட்டம். அவரது வாழ்க்கையே போராட்டம். எனவே அவர் வளரி கிருt; வாழ்கிருர், பாரதி காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் பலர் ஜமீந் தாரிகளைப் பாடினர்கள்; செல்வர்களைப் பாடினர்கள்: அவர் தம் காமக் கேளிக்கைகளுக்குத் தமிழ்க் கவியை அடகு வைத்தார்கள்; சன்மானம் பெற்ருர்கள். ஆனல் பாரதியோ! மக்களைப் பாடினன்; நாட்டு மக்க ளோடு ஒன்றின்ை: அவர் தம் இன்ப துன்பங்களைத் தனதாக மேற் கொண்டான்; அவர் தம் முன்னேற்றம் வேண்டிப் பாடினன்; வறுமையையே சன்மானமானப் பெற்றன்.