பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பத்திரிகை ஆரம்பம் செய்தார். பெங்காள முழுமை யிலேயும் புதிய கிளர்ச்சியின் பெருக்கம் மிகுதிப்பட் டிருந்தது. பெங்காளத்திலே சிறியோர், பெரியோர், ஏழைகள். செல்வர் முதலிய எல்லோரும் அன்னிய வஸ்து பஹிஷ்காரத்திலே ஒரே திடசிந்தை கொண்டவர்களாய் இருந்தார்கள். அந்தக் காங்கிரஸ் சபை நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே கட்சிச் சண்டைகள் பலமாய் விட்டன. திலகரை அக்கிராசனதிபதியாக்க விபின சந்திரர் இடத்துக்கிடம் போய் உபந்நியாசங்கள் செய்து முயற்சி புரியத் தொடங்கினர். பம்பாய் மேத்தா கம்பெனியாரே காங்கிரஸ் கூத்தின் "ஸ்டேஜ் மானேஜர் களாக" அப்போதும் இருந்தார்களாகையால், திலகர் கூடாதென்று கரேந்திர நாதருக்குப் பலமான போதனை கள் செய்து வற்புறுத்தி விட்டார்கள். கரேந்திர நாதருக்கு அப்போது சரியான யோசனை ஏற்பட்டு, இரண்டு கட்சிக்கும் பொதுவானவரும் நமது ராஷ்ட்ரீய முயற் கிக்கு மூதாதையும் ஆகிய தாதாபாய் நவுரோஜிக்கு தந்தி கொடுத்து அவரை அக்கிராசனம் வகிக்கும்படி கேட்டுக் கொண்டார். தாதாவும் சம்மதமளித்து விட்டார். இதில் புதிய கட்சியாருக்கு சந்தோஷமுண்டாய் தி ல க ரி வரவேண்டுமென்று நடத்திய பிரயத்தனங்கள் கைவிடப் பட்டன. அந்த வருஷம் பெங்காளத்திலே இருந்த கிளர்ச் சிக்கு தாதா பாய் நவுரோஜியைத் தவிர வேறு யார் அக்கிராசனதிபதியாக இருந்தபோதிலும் மிகவும் கஷ்டம் ஏற்பட்டிருக்கும். காங்கிரஸ் டிசம்பர் மாதம் நடந்தது. பெங்காளத்தார், சுதேசியம், பஹிஷ்காரம், ஜாதியக்கல்வி என்ற விஷயங்களிலேயும் மிகவும் ஊர்ஜிதமாயிருந்தார்கள். மேத்தா முதலியவர்களுக்கு மேற்படி மூன்று விஷயங்களி லும் சம்மதமில்லை. நவுரோஜியைக் கலைத்து விடுவதற்கு மேத்தா வகையருக்கள் செய்த முயற்சி கொஞ்சமில்லை.