பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஆளுல் தாதாவோ புதிய கிளர்ச்சி இந்நாட்டில் உண்டா யிருப்பது பற்றி உள்ளம் பூரித்துப் போயிருந்தார். தமது முயற்சிகளெல்லாம் பழுக்கும் காலம் வந்து விட்டது என்பதை தாதா அறிந்துகொண்டார். மேத்தா முதலிய வர்களும் பெங்காளத்திலிருந்த தேச பக்தி வெள்ளத்தைக் கண்டு பயந்து இந்த வெள்ளத்தை எதிர்க்க நம்மால் முடியாது என்று எண்ணிவிட்டார்கள். எனினும் இரு திறத்தாருக்கும் பலமான விவாதங்களும் சண்டைகளும் நடக்காமலிருக்கவில்லை. ஆனல் தாதாவின் அறிவு முதிர்ச்சியாலும், அன்பினலும், அந்த விவாதப் புயல் காற்றிலே காங்கிரஸ் கப்பல் சிதறி விடாமல் பாதுகாக்கப் பட்டது. சுதேசியம், பஹிஷ்காரம், ஜாதியக் கல்வி என்ற மூன்று மட்டுமேயன்றி ஸ் வ ரா ஜ் ய விஷயமாகவும் தீர்மானங்கள் செய்து கொள்ளப்பட்டன. காங்கிரஸ் சபை முழுதும் அத் தீர்மானங்களை அங்கீகாரம் செய்து கொண்டது. அத் தீர்மானங்கள் முழுமையும் புதிய கட்சியார் பூர்ண திருப்தி கொள்ளுமாறு அமைந்திரா விட்டாலும் பெரும்பாலும் புதிய கட்சியின் நோக்கத்தைத் தழுவியனவாகவும், அபிவிருத்தி முகம் கொண்டன வாகவும் இருந்தன. புதிய கட்சியார் ஒரேயடியாக நாடு முழுதும் நமது நோக்கத்துக்கு வந்து விடுவது சாத்திய மில்லை யாகையால் சிறிது சிறிதாகவேனும் சரியான சுதேசிய வழிக்குக் காங்கிரஸ் சபை திரும்பிக் கொண்டி, ருக்குமாயின் அதுவே போதுமானது என ஒருவாறு மனத் திருப்தி கொண்டவர்கள் ஆயினர். தேச முழுவதும் தாதாபாயின் திறமையை வியந்து, அவர் செய்த காரியத்திலே மிகுந்த சந்தோஷ மெய்திற்று. எங்கே பார்த்தாலும் ஜனங்கள் புதிய கட்சியின் பாரிசமாக அதிகச் சார்பு காட்டத் தொடங்கினர்கள்.