பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 இதெல்லம் மேத்தா கம்பெனியாருக்குப் பிடிக்க வில்லை. புதிய கட்சியார் செய்த முயற்சியின் விளைவை அழித்துவிட வேண்டுமென்று அவர்கள் தம்மால் இயன்ற விதங்களில் எல்லாம் வேலைசெய்து பார்த்தார்கள். இதன் மேல் கவர்ன்மெண்டார் ஒரு பக்கத்திலே ஜனபிவிருத்திக்கு நேர் விரோதமாகவும், இடைஞ்சலாகவும், பல விதமான விதிகள் ஏற்படுத்த ஆரம்பித்தார்கள். பத்திராதிபர்களைச் சிறையிலடைப்பதும், ஸ்வராஜ்ய போதனை செய்வோர்களை இமிசை புரிவதும், தேச பக்தர்களை விசாரணையில்லாது தீபாந்தர மனுப்புவதும் நாட்டிலே வழக்கமாய் விட்டன. இத்தோடு நிதானக் கட்சியாரை வசப்படுத்தி, உண்மை யான சுதேசிகளின் முயற்சிக்குத் தடை புரியச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கவர்ன்மெண்டார் நிதானக் கட்சியாருக்கு ஹிதமான வார்த்தைகள் அதிக மாகச் சொல்வதோடு, சிற்சில ஸாமானிய காரியங்களிலே நிதானக் கட்சியார் விரும்பக்கூடிய சில வேடிக்கை யனு கூலங்கள் செய்யத் தொடங்கினர்கள். இதிலே மேத்தா முதலியவர்கள் மனது மயங்கிப் போய் சுதேசிய அபிவிருத்திக்குத் தம்மால் இயன்ற அளவு தடை செய்யத் தீர்மானித்து விட்டார்கள். ஸஅரத்திலே சென்ற வருஷம் ஒர் மாகாணச் சங்கம் நடந்தபோது மேத்தா வகையராக்கள் அந்த சங்கத் திலே காங்கிரஸ் தீர்மானங்களுக்கு நேர் விரோதமான வேலை செய்து முடித்து விட்டார்கள். ஜாதீயக் கல்வியைப் பற்றியும் பஹிஷ்காரத்தைப் பற்றியும் பிரஸ்தாபமே யில்லாமல் மேத்தா காரியத்தை நடத்தி விட்டார். மேலும் சென்ற சில மாதங்களாக நிதானஸ்தர்கள் பேசும் பேச்சுக்களையும், செய்யும் செய்கைகளையும் கவனிக்கும் போது அவர்கள் ஸர்க்காரைத் திருப்தி செய்விக்கும் 6