பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பொருட்டாக சுதேசிய விளக்கை மங்கச் செய்ய உறுதி கொண்டு விட்டார்களென்று வெளியாகத் தொடங்கிற்று. நாகபுரத்தில் நடத்த வேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டிருந்த காங்கிரஸ் கூட்டத்தை மேத்தாவும் அவருடைய பூஜாரிகளுமாகக் சேர்ந்து சூரத் நகரில் நடத்தத் தீர்மானித்து விட்டார்கள். அதிலே புதிய கட்சியார் என்பவர்களுக்கு சந்தேகம் அதிகப்பட்டது. அப்படியிருக்க, காங்கிரஸ் நடப்பதற்கு சுமார் 10 தினங் களுக்கு முன்னமே இந்த காங்கிரஸில் இன்னின்ன விஷயங்கள் தீர்மானிக்கப்படும் என்பதைக் குறிப்பிட்டு ஒர் ஸஅசனைப் பத்திரிகை நாடு முழுவதும் நிதானஸ்தர்களால் அனுப்பப் பட்டது. அதில் ஸ்வராஜ்யம், பஹறிஷ்காரம்: ஜாதீயக் கல்வி என்ற விஷயங்களைப் பற்றிய பிரஸ்தாபமே இல்லாமலிருந்தது. இதல்ை புதிய கட்சியார் கொண் டிருந்த சமுசயங்கள் முன்னிலும் பதின்மடங்கு தீrண்ய மடைந்தன. முந்திய (1906) வருஷத்திலே கல்கத்தாவில் புதிய கட்சியார் அரும்பாடு பட்டதன் .பேரில் காங்கிரஸ் சபையாரால் அங்கீகாரம் செய்து கொள்ளப்பட்ட மேற்படி தீர்மானங்களை நிதானஸ்தர்கள் இலேசாக ஒதுக்கிவிடப் போகிருர்களென்பதை அறிந்து அநேகர் மனம் புழுங்க லாயினர். ஸஅரத் நகரமோ மேத்தா பிறந்த இடம். ராஜ்ய சம்பந்தமான விவகாரங்களில் அதிகப் பழக்கமற்ற வர்களும் தேச பக்தியைக் காட்டிலும் காசு பக்தியே பெரி தென்ற எண்ணம் கொண்டவர்களும் ஆகிய குஜராத்திப் பிரபுக்களின் செல்வாக்கு அந்த ஊரிலே அதிகம். அந்தப் பிரபுக்களிலே பெரும்பாலார் மேத்தா சொல்லியபடி யெல்லாம் ஆடக்கூடிய பொம்மைகள். இந்தத் தன்மை கொண்ட இடத்திலே புதிய கட்சியார் எவ்வளவு பலத் துடன் போன போதிலும் காங்கிரஸ் சபையை ஊர்த்துவ முகமாக்கி மேலபிவிருத்திகள் கொள்ளத் தக்கவாறு செய்