பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 யித்துக் கொண்டார். இந்த நோக்கத்தின் பேரில் காங்கிரஸ் கூடுவதற்குச் சில தினங்கள் முன்பாகவே திலகரும் அவர் கட்சியாரும் சூரத் நகரத்துக்கு வந்து, பொதுக் கூட்டங்கள் நடத்தி ஜனங்களுக்குத் தமது கருத்தை விண்ணப்பம் செய்துகொண்டார்கள். காங்கிரஸ் தேவிக்கு முன்னமேயே அணிந்திருக்கும் மணிகளைக் கழற்றி யெறிந்துவிட வேண்டுமென்ற கெட்ட நோக்கம் கொண்டிருந்த நிதானத் தலைவர்களை எவ்வகை யாகிலும் சரிப்படுத்தி அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு சமரசமாகப் போக வேண்டுமென்று திலகர் செய்த முயற்சிகள் கொஞ்சமல்ல. எப்படியாவது காங்கிரஸ் விக்கினமில்லாமல் நடந்தேற வேண்டும் என்பதே திலகருடைய நோக்கம். ஆனல் நிதானஸ்தர் களோ எவ்விதமான சமாதானத்துக்கும் இணங்காமல் ஒரே முரண் கொண்டவர்களாக இருந்து விட்டார்கள். இதன் பேரில் திலகர் ஒர் உபாயம் செய்தார். அது யாதெனில்? ராஸ் விகாரி கோஷ் என்றவரை இவ் வருஷம் இவர்கள் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிருர்கள். இவரோ சபைத் தலைமைக்குச் சிறிதும் அருகரில்லை. இவருடைய பிரசங்கம் காங்கிரஸ் சபையில் வாசிக்கப்படு முன்னரே கல்கத்தாப் பத்திரிகைகளில் பிரசுரமாகி அதன் லாராமிசங்கள் தந்தி மூலமாக ஸ்குரத்துக்கு வந்து விட்டன. இரு கட்சியாருக்கும் பொதுவாயிருந்து நியாய அந்நியாயங்களைத் திர விசாரித்து அறிந்து பrபாத மில்லாமல் நடத்துபவரே காங்கிரஸ் போன்ற மகா சபைக்குத் தலைவராயிருக்குந் தகுதியுடையவர். அவ்வாறில் லாமல் ஒரு கட்சி மனிதனுக இருந்துகொண்டு தமது தலைமை உபந்நியாசத்திலே ஒர் முக்கியமான கட்சியாரைப் பற்றி அவதூறுகள் எழுதி வந்திருக்கும் அவசர குண முடையவரும், பொறுமையற்றவருமாகிய ஒருவர் அந்த