பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 நிதானக் கட்சியார் பொது ஜனசங்கத்திலே போலீஸ் அதிகாரிகளின் சகர்யத்தைக் கொண்டு தங்களோடு பொது நோக்கமுடைய தேசாபிமானிகளே பயமுறுத்த வேண்டுமென்ற இழிவான சிந்தை கொண்டதிலிருந்து சுதேசிகளுக்கு நிதானஸ்தர்களிடம் வெறுப்பும் சினமும் உண்டானது ஒர் வியப்பாக மாட்டாது. நிதானஸ்தர் களின் மேற்படி துரோகச் செய்கைக்கு பாபு சுரேந்திரநாதி பானர்ஜியும் உடந்தையாக இருந்தார். மித்னபூர் சங்கத் திலே சுரேந்திர நாதரும் ஒர் போலீஸ் அதிகாரியும் பிரசங்க மேடையின் மீது சேர்ந்து உட்கார்ந்திருந்த வரிசையைக் கண்டவுடனே சுதேசியஸ்தர்களின் மனம் பொங்குவதாயிற்று. சுரேந்திர நாதரைத் தேசபக்த சிகாமணியாகவும் ஜகத்குருவாகவும் பாராட்டிவந்த ஜனங் களின் மனதிலே அக்காட்சி பழுக்கக் காய்ச்சிய வேல் கொண்டு குத்தியது போல் ஆயிற்று. மிதினபூர் கான்பரன்ஸ் நடந்த காலத்தில் இச்செய்தி பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்தது.) நிற்க, சென்ற டிசம்பர் மாதம் 26 ந்தேதி சூரத் காங்கிரஸ் கூடி, மிஸ்டர் மால்வியின் உபந்யாசம் முடிந்த உடனே சபாநாயகரைப் பற்றிய பிரேரணையை ஆமோதிக்கும் பொருட்டாக பூரீ பானர்ஜி ஒரு சிங்கம் எழுந்தாற்போல எழுந்து நின்ருர், இரண்டு வாக்கியங்கள்கூடச் சொல்லி மு. டி வாக வி ல் லை. அதற்குள் மகாசபையிலிருந்து "மித்னபூர் துரோகி” என்ற ஒரு சத்தம் உண்டாயிற்று. அவ்வளவுதான். அப்புறம் 20 நிமிஷங்கள் வரை சபையி லிருந்து அமளி சொல்லி முடியாது. "மித்னபூர் துரோகி" "உட்காரும் உட்காரும்" என்ற இரைச்சல் காது செவிடு படும்படியாய் விட்டது. நெடுங்காலமாக ஒருவரை ஜனங்கள் தேவதா விசுவாசத்துடன் பேணி வந்து, பிறகு திடீரென்று அவர் துரோகம் செய்து விட்டதாக அறிந்து