பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 நடந்தது கிடையாது. இது என்ன புதுமை! என்ன காலக்கேடு என்று வியப்பார் சிலர், பிரதிநிதிகளாக வந்தவர்களிலே ஒருவர் திடீரென்று காங்கிரஸ் கூடும் தினத்தில் மரணமடைந்த சகுனத்தின் பயனைக் கண்டு விட்டோமென்பார் வேறு சிலர். "வங்காளத்தில் டாக்கா மாஜிஸ்ட்ரேட்டை சுட்டு விட்டதாகப் பிரஸ்தாபம் வந்திருக்கிறது. கவர்ன்மெண்டார் மகா கோபமடைந் திருப்பார்கள். தேசத்திற்கு என்னென்ன கோரமான கொடுமைகள் விளையப் போகின்றனவோ! அதற்கெல்லாம் இதுவோர் முற்குறியாகும்" என்று கலங்குவோர் சிலர். யார் முகத்தைப் பார்த்தாலும் கலக்கத்தைத்தவிர வேறு தெளிவு கிடையாது. 26 ந் தேதி மாலையில் நகர மத்தியிலே புதுக் கட்சி யாரின் சபையொன்று கூடிற்று, எனக்கு உடம்பு சிறிது அசளகரியமாக இருந்த படியால் நான் அங்கே போகக் கூடவில்லை. நடந்த விஷயங்கள் இன்னவென்று அங்கு போயிருந்த எனது மித்திரர்களிலே சிலர் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு இரவு 8 மணிக்குச் சென்னைப் பிறதிநிதிகளின் கூடாரத்திலே பூர். ஜி. சுப்பிரமணிய ஐயர் அக்கிராசனதிபதியாக ஒரு மீட்டிங் நடந்தது. பூர். ஜி சுப்பிரமணிய ஐயர் "நடந்தது நடந்தாய் விட்டது. இனி அதனைப்பற்றி விசனப்படுவதனலேயும், பரஸ்பரம் குற்றம் கூறுவதேைலயும் யாதொரு பயனும் கிடையாது. நாளைக்கேனும் இவ்வித அசம்பாவிதமான காரியங்கள் நடக்காமலிருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்" என்ருர், அப்போது சென்னைப் புதிய கட்சிப் பிரதிநிதிகளில் ஒருவராகச் சென்றிருந்த பூரீ துரைசாமி ஐயர் M. A., B, பு பின்வருமாறு பேசினர் :