பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 "இன்று நடந்த குழப்பத்துக்குப் புதிய கட்சியார் பொறுப்பாக மாட்டார்கள். அவர்களே பொறுப்பாளிகள் என்று சிலர் எண்ணியிருக்கிருர்கள். அது மிகத்தவருன எண்ணம். மித்னபூர் சம்பவத்தைக் கருதி சுரேந்திர நாதரின் மீது சில பிரதிநிதிகளுக்கு ஆத்திர மிருந்த படியால் அவர்கள் அவருடைய பிரசங்கத்துக்குதி தடை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களுடைய கூச்சல் சிறிது நேரத்தில் தானே நின்று போயிருக்கும். அதன்பிறகு நிதானஸ்தர், புதிய கட்சியார் என்ற எல்லா வகுப்புக் களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தமக்கிஷ்டமானபடி யெல்லாம் சத்தமிட்டதுதான் சபைநடத்த முடியாமல் செய்துவிட்டது. அது எவராலும் தடுக்கக் கூடியதன்று. ஒருவர் மீது சபையாருக்குக் கோபமிருக்குமானல் அவரை ஆட்சேபித்துச் சபையார் ஒரிரண்டு நிமிஷம் சில கண்டன வார்த்தைகள் சொல்லுவது தப்பாக மாட்டாது. இது எல்லாச் சபைகளிலும் நடப்பது வழக்கம்தான். அதன் பேரில் எல்லோரும் கோபமுதிர்ச்சியடைந்து சபை குழப்ப மடைந்து விடுமானல் அதற்கு யாரும் பழியாக மாட்டார்கள்' என்று விவரித்தார். அப்பால் பூரி. வி. சுப்பிரமணிய பாரதி சொல்லி யதாவது : இன்று மாலை நடந்த புதுக்கட்சியார் சங்கத்திலே பூரி திலகரும், மற்றத் தலைவர்களும் சொல்லிய விஷயங்களை என் மித்திரர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னர். அதை உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். இன்று பகலில் நடந்த அசம்பாவிதமான காரியத்துக்கு யார் ஜவாப் தாரியாக இருந்தபோதிலும், நாளைமுதல் காங்கிரஸ் முடியும் வரை இம்மாதிரியான சம்பவம் நிகழ்வதற்குப் புதிய கட்சியைச் சேர்ந்த எந்தப் பிரதிநிதியும் இடம்