பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 கொடுக்கலாகாது என்று எங்கள் கட்சியாருக்குத் திலகர் சொல்லியிருக்கிரு.ர். 'ஐக்கிய பலம். நிதானக் கட்சியாரும் நமது கட்சியாகும் சேர்ந்து பாடுபட்டால்தான் தமது தேச நன்மைக்கு விரைவாக ஹேது ஏற்படும். நமது கட்சியாரை காங்கிரஸிலிருந்து பிரித்து விடுவதற்கு அவர்கள் பலவிதமாக முயற்சி புரிந்து வருகிருர்கள். அதற்கு என்ன வியாஜம் ஏற்படப் போகிறதென்று பார்த்துக் கொண்டிருக்கிருர்கள். நாமும் ஏமாந்து போய் ஓர் வியாஜம் ஏற்படுத்திக் கொடுத்துவிடலாகாது. இன்று நடந்த குழப்பத்திற்கு நமது கட்சியார் முகாந்திரமில்லை என்பதை நான் நன்ருக அறிவேன். "ஆகையால் நாளைக்கு சுரேந்திரநாதராகட்டும், வேறு எந்த நிதானஸ்தர்களாகட்டும் நம்மைப்பற்றி என்ன சொல்லிய போதிலும் நீங்கள் எல்லாம் வாய் திறவாமல் மவுனமாகக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். அவரி களுடைய பிரசங்கத்துக்கு எவ்விதமான தடையும் செய்யக்கூடாது' என்று திலகர் வற்புறுத்தியிருக்கிரு.ர். ஆதலால் இனியெனும் நம்மிரு கட்சியருள் ஒற்றுமையாக நயத்தில் காரியம் நடக்கவேண்டும் என்பதே திலகரும், அ வ ைர ப் பின்பற்றுவோர்களும் கொண்டிருக்கும் நோக்கமென்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். காங்கிரஸ் சமயத்தில் நம்மவர்கள் இரைந்து மூச்சுக்கூட விடுவதில்லை என்று மவுன விரதம் எடுத்துக் கொண்டிருக்கிருர்கள். இது உங்களுக்குத் திருப்தி விளைவிக்குமென்று நம்புகிறேன்." என்று பேசினர். இதன் பேரில் சபையோர்கள் எல்லாம் மிக்க சந்தோஷம் பாராட்டினர்கள். 27ந் தேதி காங்கிரஸ் நிர்விக்கினமாக முடிவு பெறுமென்ற முழுநம்பிக்கையுடன்