பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ĝg அன்றிரவு பிரதிநிதிகள் எல்லாரும் நித்திரைக்குச் சென்ருர்கள். மறுநாள் இன்றைக் காட்டிலும் பெரிய சண்டமாருதம் வீசப்போகிற தென்பதை நாங்க ள் கனவிலுங்கூட அறிந்திருக்கவில்லை. மறுநாள் 27ந் தேதி. பொழுது விடிந்தது. சுமார் 8 மணிக்கெல்லாம் சென்னைப் பிரதிநிதிகளின் ஒர் சபை சேர்ந்து விட்டது. இச்சபையின் நோக்கம் யாதெனில் முதல் நாள் காங்கிரஸ் குழப்பத்திலே சென்னைப் பிரதி நிதிகள் சிலர் சேர்ந்திருந்தார்களாம். அவர்களுடைய நடத்தையைக் கண்டித்து வெறுப்புத் தீர்மானம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் இச்சபை கூட்டினர், இது சென்னைப் பிரதிநிதிகளின் சபை என்ற பொய்ப் பெயருடன் நடத்தப்பட்டது. ஆனல் வாஸ்தவத்திலே. (எங்களில் இரண்டு மூன்று பேரைத் தவிர) இதில் முற்றிலும் நிதானக் கட்சியாரே கூடியிருந்தார்கள். சென்னை மாகாணத்துப் புதிய கட்சிப் பிரதிநிதிகள் அழைக்கப்படவே இல்லை. இந்தப் பிரதிநிதிச்சபையிலே பூர், என். சுப்பராவ் அக்கிராசனம் வகித்தார். படபடப்பும், முன்கோபமும், தேசாபிமானிகளிடம் வெறுப்பும் ஒன்றுகூடி அவதரித்தாற் போன்ற பூர். வி. கிருஷ்ணசாமி அய்யர் ஏதோ சில அர்த்தமற்ற வார்த்தைகள் பேசினர். யாதொரு சம்பந்தமு மில்லாமல் புதிய கட்சியாரைப் பற்றி அவதூறுகள் பேசிக் குவித்து விட்டார். அப்பால் இவருக்கும் புதுக்கட்சியார் சிலருக்கும் உஷ்ணமான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சபை முடிந்து விட்டது. அதன் பிறகு புதிய கட்சியாரின் கூட்டம் ஒன்று சேர்ந்து நிதானக் கூட்டத்தின் தீர்மானங் களைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டன.