பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஆர்வாரம், முதல்நாள் நடந்த குழப்பத்தைக் காட்டிலும் பலமடங்கு பெரிதாகிய குழப்பம் பிறந்து விட்டது. பிரசங்க மேடையின் மேலே இருந்தவர்களிலே பெரும் பாலோர் நிதானக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர் களில் ஒருவன் திலகர் தலையை நோக்கி ஓர் நாற்காலியை எடுத்தெறிந்தான், அது திலகருடைய தலையிலே படாமல் பூரீ காபர்தே வந்து பாதுகாத்தார். மகாராஷ்ட்ர வீரதிலக மாகிய பூரி திலகர் சிறிதேனும் நெஞ்சம் கலங்காமல் மகா சபையை நோக்கிக் கைகட்டி நின்றுகொண்டு சபையை நோக்கி, "நான் அமெண்ட் மெண்ட் கொண்டு வரும் விஷயத்தைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் தெரிய விரும்புகிறேன்' என்ருர். குழப்பம் அதிகரித்துப் போய் விட்டது. ராஸ் விகாரி தமது உபந்நியாசத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒன்றிலேயே கருத்தைச் செலுத்திய வராய் ஆரவாரத்தை அடக்கிவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் கைம்மணி ஒன்றை வைத்துக்கொண்டு வெகு பலமாகக் குலுக்கிப் பார்த்தார். குழப்பம் முதிர்ந்து விட்டது. திலகர் மீது நாற்காலிகள் மாரியாகச் சொரிந்தன. தெய்வ கிருபையாலும் அவருடைய பக்தர்களின் தீர நிலை யாலும் அவர்மீது ஒரு துரும்புகூடப் படவில்லை. மகா வீரர்களான பஞ்சாபி கூடித்திரியர்களும், மகாராஷ்டிரர் களும், நிராயுதபாணிகளாக இருந்த போதிலும், தமது உடலைக் கருதாமல், தமது சற்குருவாகிய ரீதிலகரை அணியணியாக வந்து சூழ்ந்து கொண்டு, அவர் மீது எறியப்பட்டவற்றை யெல்லாம் தமது கையாலும், தலை யாலும் தாங்கி அவருடைய புனித சரீரத்துக்கு யாதொரு ஆபத்தும் நேரிடாமல் காத்தார்கள். இதற்குள் மேத்தா முதலிய நிதானத் தலைவர்களால் கூலிக்குக் கொண்டுவந்து