பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பந்தலிலே திருட்டுத்தனமாக மூலைக்கு மூலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டா (செம்படவ முரடரிகள்)) களும், மித்னபூரில் நடந்தது போலவே நிதானக் கட்சி யாரால் துரோக சிந்தையுடன் வரவழைத்து வைக்கப் பட்டிருந்த போலீஸ் சேவகர்களும் வந்து பிரசங்க மேடை மீது நிரம்பிப் போயினர். போலீஸார் கையிலே நிராயுத பாணிகளான பிரதிநிதிகள் அடிபட்ட பரிதாபத்தை இப்போது நினைத்தாலும்கூட மனது வருத்தமடைகிறது. அரிய கல்விமான்களும், தாய் நாட்டின் சேவைக்காக நெடுந்துாரங்களிலிருந்து பொருளையும் காலத்தையும் சரீர சுகத்தையும் பொருட் படுத்தாமல் வந்த அபிமானிகளும் ஆகிய பிரதிநிதிகளை அடிக்கும் பொருட்டு, முன்னதாகவே இரக்கமற்ற ஈன குணமுடைய பாமர முரடர்களையும், போலீஸையும் வரவழைத்து வந்தவர்களை என்னென்று வருணிப்பதென்று நமக்குப் புலப்படவில்லை. குழப்பம் கலகமாய் விட்டது. பிரசங்க மேடை யுத்தகளமாய் விட்டது. மகாராஷ்டிரர்களை விசேஷமாகக் குறி பார்த்துப் போலீசார் பார்த்துப் பார்த்து அடித்தார்கள். நிராயுத பாணிகளைத் தோன்றியவாறு தடிகொண்டு புடைப்பது செளரியமில்லை யென்று போலீஸ் முரடர்களுக்குத் தோன்றவில்லை. அவர்களை ஏவி விட்ட கற்றறி மூடர் களுக்கே இது தோன்ருமல் போய் விட்டதே! ஒரு மகாராஷ்டிரப் பிரதிநிதிக்கு மண்டை மூன்று பிளவாகக் கீறிப் போய்விட்டது. திலகரைச் சுற்றி நின்று அவருக்கு ஹானி வராமல் பாதுகாத்த வீரர்களின் கூட்டத்திலே சேர்ந்திருந்த சென்னைப் பிரதிநிதிகளிலே இரண்டு பேருக்கு பலமான அடிபட்டது. இன்னும் எத்தனையோ பிரதிநிதிகள் பலமான அடியுண்டும், காயப்பட்டும், விழுந்தனர். ஆனல் தமக்கு எத்தனை அடிபட்ட போதிலும் திலகரைக் காக்க வேண்டுமென்று அசையாமல் நின்ற இந்தப்பிரதிநிதிகளின்