பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 திடத்தன்மையை எண்ணும்போது உடல் புல்லரித்து மிகுந்த மகிழ்ச்சியுண்டாகிறது. பஞ்சாப் க்ஷத்ரிய ரத்ன மாகிய பூரீபகத் என்பவர் தமது இரண்டு கைகளே ஆயுத மாகக் கொண்டு போலீஸாரின் அடிகளையும், நிதானஸ் தர்கள் வீசிய நாற்காலிகளையும், தாங்கிய வீரத்தன்மை சொல்லுந்தரமன்று. நிதானக் கட்சித்தலைவர்கள் கலக மூட்டி விட்டுப் பின் வாயில் வழியாக தமது பிராணன் கற்கண்டாக நினைத்துத் தப்பியோடிவிட்டார்கள். உயர்ந்த பட்டதாரிகளும், கல்விமான்களும், ரீமான்களுமாகிய சில பிரதிநிதிகளைப் போலீசார் கைதிகளாகப் பிடித்துச் சென்று விட்டார்கள் என்ற வதந்தியுண்டாயிற்று. 27ந் தேதி மாலை எங்கள் கூடாரத்திலே யிருந்த குழப்பமும், பரபரப்பும் வருணித்து முடியத் தக்கவை யன்று. 'தூத்துக்குடிச் சிதம்பரம் பிள்ளை எங்கே?' என்று ஒரு நண்பர் என்னிடம் மகா ஆத்திரத்தோடு வந்து கேட்டார். "ஆகா! அவரைத் தவறவிட்டல்லவோ வந்து விட்டோம்” என்று நான் நினைத்து வருத்தமடைந்தேன். காங்கிரஸ் பந்தலிலே பெரிய மீசைகளும் புஸ்தி'களும் வைத்துக்கொண்டு தென்னுட்டில் (திருப்பூரில் என்று ஞாபகம்) வந்து நெடுநாளாக வர்த்தகத் தொழில் நடத்தி வரும் ஒரு ஹிந்துஸ்தானி லாலா, சில போலீசாரை அழைத்துக் கொண்டு வந்து என்னையும், பூரீ சிதம்பரம் பிள்ளையையும், வேறு சிலரையும், அப் போலீசாரிடம் காண்பித்து, 'இவர்களெல்லாம் புதிய கட்சியார்கள். இவர்களை அரெஸ்ட் செய்யும்" என்று சொல்லியது என் காதில் பட்டது. ஆனால் அந்த சமயத்தில் போலீஸார் பிரசங்க மேடையின் மீது இருந்த ஆரவாரத்தை நோக்கிச் சென்று விட்டார்கள். எங்களைக் கவனிக்கவில்லை. அப்பால் பந்தலில் கலவரம் அதிகப்படவே நாங்கள் ஒருவரி லொருவர் பிரிந்து போய் இன்னர் இன்ன இடமிருக்