பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 கிருர்கள் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. ஆதலால் ஒருவேளை போலீசார் பின்னிட்டு பூரீ சிதம்பரம் பிள்ளை. பூர் துரைசாமி அய்யர், கரேந்திர நாத் யதிராஜ், திருவல்லிக்கேணி கிருஷ்ணமாச்சாரி முதலியவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எனக்குண்டாயிற்று. போலீசார் பிடித்துக் கொண்டு போய் எனது நண்பர்களுக்கு எவ்விதமான தீங்கும் செய்ய முடியாது என்பதை நானறிவேன் என்ற போதிலும் மனதிலே ஆத்திரம் பொறுக்கவில்லை. அவர் களைக் கண்டு பிடிக்க வேண்டுமென்று இடத்துக்கிடம் சுற்றிப் பார்த்தேன். எங்கும் அகப்படவில்லை. நாகப்பூர் பிரதிநிதிகளின் கூடாரத்திலே பூரீமான் திலகர் முதலியவர்கள் வந்து தாமதிப்பதாகத் தெரிந்தது. மேத்தாவின் போலீசாரும் குண்டர்களும் போய் நமது மகரிஷியை நெருங்காத வண்ணம் கூடாரத்தைச் சூழ்ந்து கதேசியப் பிரதிநிதிகள் காவல் காத்துக் கொண்டிருந் தார்கள். அவர்களிடம் கேட்டுக் கொண்டு, அந்த கூடாரத்துக்குள்ளே பூரீ சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள் இருக்கக் கூடுமென்று போய்ப் பார்த்தேன். அங்கும் இல்லை. பிறகு அங்கிருந்து வெளியேறி எங்கள் வசதிக்கு வந்த போது, யதிராஜ், கிருஷ்ணமாச்சாரி இருவரையும் கண்டேன். சிதம்பரம் பிள்ளை, துரைசாமி அய்யர் இரண்டு பேரும் காங்கிரஸ் பந்தலுக்கு வெளியே வந்து விட்ட தாகவும், அவர்களுக்கு எவ்விதமான சங்கடமும் நேரிட வில்லை என்றும், அவர்களைத் தாம் நேரிலே கண்டதாகவும் ஒருவர் சொன்னர். எங்கள் மனம் ஒருவாறு அமைதி யடைந்தது. ஆயினும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் (தேச பக்தியிலும், மனேதிடத்திலும் நிகரற்ற வர்கள்) போலீசார் கையிலே அடிபட்டுத் தாமும் அற்ப 7