பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஜந்துக்களை நையப் புடைத்து வந்தார்கள் என்று கேள்வி யுற்று என் மனது வருத்தமடைந்தது. "ஐயோ மேத்தா ஒரு காலத்தில் பாரத மாதாவின் அடிக் கமலங்களிலே உண்மையான பக்தி செலுத்தி வந்த உம்முடைய நெஞ்சு, இப்போது அந்நியர் சகவாசத்தாலும், சு. ய ந ல ப் பற்றிலுைம். உம்முடைய சொந்த சகோதரர் மீது போலீ சாரை ஏவிவிடத் தக்கவாறு அவ்வளவு தூரம் கல்லாய் போய் விட்டதே!” என்று எண்ணி சஞ்சல மடைந்தேன். ......அன்று மாலையும் மறு நாளும் புதிய கட்சியார் நகர மத்தியிலே தமது கூட்டங்கள் கூட்டினர்கள். புதிய கட்சியார் மட்டுமேயல்லாது பொதுப் படையாகக் கல்கத்தா காங்கிரஸ் தீர்மானங்களே அங்கீகாரம் செய்யும் பிரதிநிதிகள் எல்லாரும் சேர்ந்து பாபு அரவிந்த கோஷின் அக்கிராசனத்தின் கீழ் ஒரு பெரும் சங்கம் நடத்தினர்கள். அங்கே பூரீ திலகர், காங்கிரசில் பிளவு நேர்ந்ததற்குரிய காரணங்களை எல்லாம் விசதமாக எடுத்துரைத்தார். இன்னும் ஒரு முறை சூரத்திலே காங்கரஸ் நடத்துவார் களானுல் நாங்கள் எளிதில் அங்கு போகத்துணிய மாட்டோம். ஆனல் மேத்தா வரமாட்டாரென்று நிச்சய மாகும் பகடித்தில் ஒருவேளை போகக் கூடும்.