பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த சாஸ்திரத்தில் ‘ரஸ் ஞானத்திற்கு உபாசனையே முக்கிய ஸ்தானம்” என்பது மிகவும் அழுத்திச் சொல்லப்படுகிறது. அதன் பேரில் தாம் சில தினங்களுக்கு முன்பு வேத நாயகர் கோயிலைப் பிரதrணம் செய்து கொண்டிருந்ததாகவும் அப்போது இந்த ஊர்க்குள்ளச்சாமி என்ற பரதேசி தம்மை இடையே நிறுத்தி ‘ஓம் சக்தி’ என்ற மகாசக்தி மந்திரத்தை நமக்கு உபதேசம் செய்து விட்டுப் போனதாகவும் அதிலிருந்து தாம் பராசக்தி உபாசனை செய்து வருவதாகவும் சொன்னார்.

‘'நான் மிகவும் சந்தோஷத்துடன் அவரை வண்டியேற்றி வழியனுப்பி விட்டு வந்தேன். அவர் இன்னும் நம்முடைய புஸ்கத்தை திரும்பக் கொடுத்தனுப்பவில்லை’ என்று மகாகவி எழுதுகிறார்.

சங்கீத விஷயத்தைப் பற்றியும் கூத்து (நாட்டியம்) பற்றியும் மகாகவி பாரதியார் அற்புதமாக இந்தக் கட்டுரையை சிறந்த கருத்துச் செறிவுகளுடன் எழுதியுள்ளதைக் காண்கிறோம்.

மகாகவி பாரதியார் சிறந்த கவி ஒருடன் நல்ல குரல் வளம் மிக்க பாடகரும் கூட அவர் தன்னுடைய கவிதைகள் அனைத்திற்கும் ராகம், தாளம், வர்ணமெட்டு முதலியவற்றை அமைத்து இயற்றியுள்ளது.

மகாகவி பாரதியார் நல்ல சங்கீத ஞானமுள்ளவர் பாட்டுக்களில் நவரஸங்களும் வெளிப்பட வேண்டுமென்பது அவர் விருப்பம், பாரதியார் கர்நாடக இசையில் நல்ல ஞானமும் அனுபவமும் உள்ளவர். இந்துஸ்தானி இசை பற்றியும் அறிந்தவர்.

இசை பற்றி பாரதம் சிறந்த பாரம்பரியத்தையும் அனுபவத்தையும் கொண்டது. இசையை தெய்வீகத் தன்மையுடன் இணைத்து பாரதம் மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. அதைப் போலவே சிறந்த நல்ல எளிமையான சிறந்த இசைக்கருவி கருவிகளையும் படைத்துள்ளது. நல் இசையுடன் தாளஞானத்தையும் பாரதி சிறப்பாகக் குறிப்பிடுகிறார். நமது நாட்டின் சிறந்த இசைக்கருவிகளான தம்பூர், வினை (யாழ்) ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றிக் கூறுகிறார்.

பெண்களின் தனிப்பாடல்கள், கூட்டாகப் பெண்கள் சேர்ந்து பாடும் பாடல்கள் மற்றும் சாதாரண மக்கள் பாடும் பாடல் வகைகள் பற்றி மிகவும் சிறப்பாகப் பேசுகிறார்.

தமிழின் சிறந்த இலக்கியங்களான முக்தி இலக்கியங்கள் தோவாரம், திருவாசகம், சைவத்திரு முறைகள் நாலாயிரத்தில் யப்பிரபந்தம் ஆகியவை சிறந்த பக்தி நிறைந்த இசை, நூல்கள் சிறந்த பாடல்கள். அவைகளை மகாகவி பாரதி போற்றுகிறார்.

மகாகவி பாரதி நாட்டில் (அபிநயம் பற்றி) மிகச்சிறந்து கருத்துக்களை

=

101