பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியிட்டிருக்கிறார்.

மகாகவி பாரதியின் கருத்துக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தமிழ் மக்களிடம் நிலைத்து நிற்கும்.

வாழ்க பாரதி நாமம்.


அரசியல் சுதேசிய முயற்சியும் மக்கள் எழுச்சியும்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதேசி இயக்கம் மேலும் வளர்ச்சி பெற்றது. நாடெங்கும் பரவியது. தீவிரவாத இயக்கம் வலுப்பெற்றது. சுதந்திரம் எனது படிப்புரிமை என்று திலகர் அறை கூவல் விடுத்தார். இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை ஆண்டு தோறும் கூடி இந்திய மக்களுடைய பல்வேறு அரசியல் உரிமை கோரிக்கைகள் பற்றிப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞர்களிடம் வேகமாக சுதந்திர உணர்வும் வேகமும் அதிகரித்தது. மகாகவி பாரதி தனது கட்டுரையில் எழுதுகிறார்.

“சுதேச முயற்சி பாட்டிலே தோன்றிய பிறகு பல விஷயங்களில் குணம் கண்டிருக்கிறோம். கைத் தொழில் அபிவிருத்தி தேசிய வர்த்தகம் ஜன ஐக்கியம். சுய பாஷைகளில் டவளர்ச்சி முதலிய பல அம்சங்களிலே கை

கண்ட பலன் பார்த்திருக்கிறோம். இதை நாம் இன்னும் எத்ததனக் கெத்தனை

ஆவலுடன் பரிபாலித்து வருகிறோமோ அத்தஜைக்கத்தனை நாடு பலவிதங்களிலேயும் rேமப்பட்டு வரும்’ என்று மகாகவி பாரதி எழுதுகிறார்.

மகாகவி மேலும் எழுதுகிறார், ‘ஆனால் சென்ற சில வருடங்களாக ஆங்கிலேய அதிகாரிகளிலே சில சில்லரை’ உத்யோகஸ்தர்கள் நம்மவர்களாகிய ஆங்கிலேய வார்த்கர்களுக்கு இதனால் நஷ்டமும் தமர்கே சில அசெளகர்யங்களும் உண்டாவது கருதி இசைச் சிலர் தப்பான வியாஜ்யங்களைச் சொல்லி அடக்கி விடப் பார்க்கிறார்கள். ஆட்டுக்குட்டியைத் தின்ன விரும்பிய ஒநாய், ‘ஏ ஆட்டுக்குட்டியே நீ என்னைத் திட்டினாயாமே” என்று கேட்ட கதை போல, இந்த ஆங்கிலேய உத்தியோகஸ்தர்கள் நம்மை இராஜத் துரோகிகளென்று பொய்க் குற்றஞ் சார்த்தித் தண்டனைகள் செய்து நமது காரியத்தைக் கொடுத்து விடப் பார்க்கிறார்கள். =

102