பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்ஙனம் ஆங்கில அதிகாரிகளிலே பலர் பொய்யான கோட நடிப்பு நடித்துக் கொண்டு நம்மவர்களிலே சில முதல்வர்களுக்கு மிருகத்தனமான தண்டனைகள் விதித்து விட்ட தினின்றும், கிராமந்திரங்களிலே சாமான்ய ஜனங்கள் சில சுதேசியம் என்று சொன்னாலே ராஜாங்கத்தாருக்கு விரோதமாகலாம் என்றெண்ணி நடு நடுங்கி தமது மனிதிற்குள்ளே நமது தர்மத்தில் அபிமானம் கொண்டவர்களாக இருந்தாலும் அச்சத்தினால் வெளிக்கு ஆசிரத்தை காண்பிக்கிறார்.

இது நிஷ்காரணமான பலம். அவசியமற்ற மூடத்தனம். ‘வந்தே மாதரம்’ (தாயை வணங்குகிறேன்) என்பது எந்த சட்டத்திற்கு விரோதம் உள்நாட்டு சாமான்களையே கிரயத்துக்கு வாங்குவேன் என்ற விரதம் செய்துகொண்டால் என்னுடைய சட்டத்திற்கு விரோதம் என் பணம். அதைக் கொடுத்து எனக்கு இஷ்டமான சாமான் வாங்கிக் கொள்கிறேன். இதில் ராஜாங்கத்தார் என் தலையிட வேண்டும்.

கள், சாராயம் நாட்டிலே பரவாமல் தடுப்பதற்கு ஆங்கிலேயர் ராஜாங்கத்தார் யாதொரு உதவியும் செய்யாமல் தீர்வை லாபத்தைக் கருதி மது பானத்தைப் பரவச் செய்து கொண்டு வருகிறார்கள். எத்தனையோ சீர்திருத்த சங்கத்தார்கள் (சுதேசிகள் மட்டுமல்ல, மாக்னிக்கல், சாமுவெல் ஸ்மித் முதலிய பல ஆங்கிலேயர்களும் கூட) இது கூடாதென்று முட்டி முட்டிப் பார்த்தும் ஆங்கிலேய கவர்ன்மென்டார் சிறிதேனும் கவனிக்காம லருக்கிறார்கள்.

இப்படியிருக்க, என் தேசத்து கைக்கோளர்கள் செய்த துணிகளை நான் எனது நாட்டிலே பரவச்செய்வேன் என்றால் இது ராஜாங்காத்தாருக்கு பெரிய விரோதமாகவா போய்விடும்? எனது குழந்தைகள் எனது முதாதையர்களைப் பற்றியும் எனது தேச சரித்திரத்தைப் பற்றியும் ஒன்றுமே தெரியாமல் நான் நம்பும் வேதங்கள் சாஸ்திரங்கள் முதலியவற்றின் பெருமையை அறியாமல், ஜீவனத்திற்கு வேண்டிய கைத்தொழில்களைப் பற்றி எதுவே கற்றுக் கொள்ளாமல் மனிதர்களை போன கிராப் பெட்டிகளாகச் செய்யும் நாசகரமான கல்வி கற்கும்படி செய்து அவர்களைக் கொடுக்க மாட்டேன். ஜாதியப்பாட சாலைகளுக்கு அனுப்பி ஐரோப்பியக் கல்வியிலே பிரயோஜனகரமான அம்சத்தை மட்டும் கற்றுக் கொள்ளும்படி செய்து எனது தேசத்து ஞானமும் என் குழந்தைகளுக்கு ஏற்படும் படி செய்வேன். இதில் சட்டத்திற்கு என்ன கஷ்டம் சம்பவித்து விட்டது?

இனிப் பணச் செலவு மிகுதியாவதை உத்தேசித்து எங்கள் வியாஜ்ஜியங்களைப் பஞ்சாயத்துக்கள் மூலமாகத் தீர்த்துக் கொண்டால் எந்த சட்டத்திற்கு விரோதம்?

எனது தகப்பன் காலத்தில் எங்களவர்களுக்கிருந்த தேக பலமும் செளகர்யமும் தீர்காயுரும் இந்தத் தலைமுறையிலே ஏன் இல்லை? நாளுக்கு

103