பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள் எனது தேசத்தார்கள் குறுகி, மெலிந்து, துப்பலமடைந்து சுடினித்து அற்பாயுஸ்ாக ஏன் மடிகிறார்கள். இதை நீக்கும் பொருட்டு ஊருக்கு ஊர் சரீர பலத்திற்குரிய கர்லா, சிலம்னு கஸ்ரத் இவை பழகும் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்துவேன்.

நான் இப்படிச் செய்வதினால் எந்த சட்டம் முறிந்து போகிறது? இங்கிலிஷ் பாட சாலைகளிலே கூட நமது பிள்ளைகளுக்கு ஒரு விதமான சரீரப் பயிற்சி கொடுக்கவில்லையா? இங்கிலிஷ் பள்ளிக் கூடங்களிலே போய் படிக்கத் தகுந்த சொத்தில்லாத பிள்ளைகள் எங்கள் தேசத்தில் கோடிக்கணக்காக இருக்கிறாரகள். இவர்களுடைய சரீரம் பல மடையக்கூடாதென்று எங்கேனும் சஸ்திரமேனும் சட்ட மேனும் உண்டா? அதற்குரிய முயற்சிகளை நான் செய்தால் அதனின்று சட்டத்திற்குத் தலை நோவு கண்டுவிடுமா? சீச்சி, சுதேசியம் சட்ட விரோதம் என்று சொல்லுகிறவர்கள் பொய் சொல்லுகிறார்கள்.

அவர்கள் நம்மைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசுகிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு மயங்குபவர்கள் தேசநலம் அறியாதகளிமண் அறிவு கொண்ட மூடர்கள்.

அந்நிய வஸ்துவர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாயத்து, சரீரப் பயிற்சி இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களாகும். இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும் கிடையாது. இவற்றை ஆதரிக்காமலிருப்பவர்கள் தேசத்துரோகிகள் ஆவார்கள் என்று மகாகவி பாரதியார் எழுதுகிறார். இந்த வரிகளை நாம் கருத்துான்றிப் படிக்க வேண்டும். இந்தக் கட்டுரை வரிகளை மகாகவி பாரதியார் எழுதிய காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். பாரத நாட்டில் ஆங்கிலே அன்னியர் ஆட்சி வலுவாகப் படிந்து அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தை இந்தியாவில் வரலாறு பூர்வமாக இரண்டு கட்டமாகப் பிரிக்கலாம். 1757 ஆம் ஆண்டில் வங்காளத்தில் நடைபெற்ற பிளாசி யுத்தத்தில் ஆங்கிலேயர் வியாபாரக் கம்பெனியின் ராணுவ படைகள் வெற்றி பெற்று அப்பகுதியின் ஆட்சியை வரிவசூல் அதிகாரத்தை நிர்வாகத்தைக் கைப்பற்றினார்கள். அது முதலாக இந்திய மண்ணில் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியது என்று கூறிலாம். அது முதல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் இந்தியாவில் வியாபாரம் மட்டும் செய்யவில்லை. பிரிட்டிஷ் கம்பெனியாரின் ராணுவம் படைகளும், இந்திய நாட்டைப் படிப்படியாக, போர்கள் நடத்தி அங்காங்கிருந்த அரசர்களை எதிர்த்துப் போர் நடத்தி, ஆட்சிகளைக் கைப்பற்றி அரசியல் நிர்வாகத்தைக் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு ஆட்சியாளர்களாக மாறினார்கள்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, தனது வியாபாரக் கம்பெனியுடன்,

104