பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராணுவத்தையும் வைத்துக் கொண்டு, சாத்தியப்பட்ட இ! |ங்களில் எல்லாம் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி நிர்வாகத்தையும் நடத்தத் தொடங்கினார்கள். இந்திய நாட்டில் பிரிட்டிஷ் வியாபாரக் கம்பெனியின் ஆட்சியும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்னும் பெயரிலான வியாபாரக் கம்பெனியின் நிர்வாகத்தின் பகுதியாக மாறியது.

இந்தியாவில் ஒரு ஒன்றிணைந்த ஆட்சி நிர்வாகம் அரசியல் நிர்வாகம் இல்லை. சட்டம் அமைதி என்று எதுவும் இல்லை. ஏறத்தாழ அராஜகமே நிலவியிருந்தது. தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆனார். அரசின் பணியாக வரி வசூல் மட்டுமே நடைபெற்றது. அந்த வரி வசூலை பிரிட்டிஷ் வியாபாரக் கம்பெனியார் தங்கள் ராணுவ பலத்தின் மூலம் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் நடத்தினார்கள்.

தங்கள் வியாபாரக் கம்பெனியின் நிர்வாகம் பகுதியாக, வரி வசூல் பகுதியும் அதன் வரவு செலவுப் பகுதியும் நடைபெற்றது. பிரிட்டிஷ் வியாபாரக் கம்பெனியின் படைகள் ஆங்காங்கிருந்த அரசுகளைப் போர்கள் மூலம் கைப்பற்றி தங்கள் அரசியல் நிர்வாகத்தை படிப்படியாக விரிவுப்படுத்திக் கொண்டார்கள். அதற்காக, பிரிட்டிஷ் கிழக்கிந்திய வியாபாரக் கம்பெனியின் படைகளும், தங்களுக்கு ஆதரவாக இருந்த இந்திய சிற்றரசுப் படைகளும் கணக்கற்ற சிறிய சிறிய நடுத்தரப் போர்களை நடத்தினார்கள்.

இந்த பிரிட்டிஷ் கம்பெனி படைகள் இந்தப் போர்களை நடத்திய போது, அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தங்கம், வெள்ளி, நகைகள், பண்ட பாத்திரங்கள், தானியங்கள், மரங்கள், மரச் சாமான்கள் மற்றும் பல வகைப் பொருள்களைக் கொள்ளையடித்துக் கையகப்படுத்திக் கொண்டார்கள்.

வீடுகளைக் கொள்ளையடித்தார்கள். கோயில்களைக் கொள்ளையடித்தார்கள். காடுகளைக் கொள்ளையடித்தார்கள். அரண்மனைகளைக் கொள்ளையடித்தார்கள். ஆடு, மாடுகளை அடித்து கொன்று தின்றார்கள். நமது நாட்டில் விளைந்ததானியங்கள் குறிப்பாக நெல், கோதுமை, பருத்தி, சணல், அவுரி, மற்ற பொருள்களையெல்லாம் குறைந்த விலை கொடுத்தும் வரிக் கொள்ளை, வட்டிக் கொள்ளையாகவும் சுருட்டிக் கொண்டு போனார்கள்.

உதாரணமாக வடக்கு தமிழ்நாட்டுப்பகுதிகளில் வந்தவாசிபோர்களிலும் மைசூர் போர்களிலும், பிரிட்டிஷ் படைகளும் பிரஞ்சு படைகளும் நவாப் படைகளும் மாறி மாறிச் சென்று ஊர்களையே நாசமாக்கினார்கள். வழி நெடுகிலும் கிராமங்களிலும் ஊர்களிலும் இருந்த ஆடு, மாடுவுகளையெல்லாம் அடித்து தின்றார்கள். ஊர்களை சூரையாடினார்கள். நாட்டில் ஆடு, மாடு இனங்களே அழிந்து போய், சாகுபடித் தொழில் நின்று போய் நெசவுத் தொழில் நின்று போய், பல லட்சக்கணக்கான மக்கள்

105