பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினியாலும் படைகளின் தாக்குதல்களாலும் செத்து மடிந்தார்கள்.

இப்படிப்பட்ட கொள்கைகளினால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் சாதாரண குமாஸ்தாக்கள், பணியாட்கள், கூடகோடீஸ்வரர்கள் ஆகி இங்கிலாந்தில் பெரிய பிரபுக்கள் ஆனார்கள். பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய கொள்ளை கொலைகள், போர்கள் பற்றி பல விசாரணைக்கமிஷன் அமைத்து விசாரணை நடத்தி அறிக்கைகள் தயாரித்தார்கள். அந்த அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. அதிலிருந்து வெளியான சிலதகவல்களே கூட உலகை திடுக்கிட வைத்தன. பிரிட்டன் ஆட்சியில் இருந்த ேொடுங்காலர்களையும் கூடதிடுக்கிட வைத்தன.

இதனையே பாரதி தனது பாடல்களில்,

‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம்

கொள்ளை கொண்டு போகவோ நாங்கள்

சாகவோ, அழுது கொண்டிருப்போமோ?

நாங்கள் ஆண் பிள்ளைகள் அல்லவோ

என்று பாடினார்.

இத்தனை கொடுமைகளுக்கிடையிலும், பிரிட்டிஷ் வியாபாரக் கம்பெனியின் படைகள் அவ்வளவு சுலபமாக இந்திய நாட்டைக் கைப்பற்றி விடவில்லை. பல இடங்களில் பிரிட்டிஷ் படைகளுக்குக் உள்நாட்டு படைகள் மக்கள் கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. பிரிட்டிஷ் படைகள் கடுமையான பல போர்கள் நடத்த வேண்டியதிருந்தது.

இந்தப் போர்களில் ஏராளமான இந்தியப் படைகளும் பிரிட்டிஷ் கம்பெனி படைகளும் மாண்டன. பல இடங்களிலும் பிரிட்டிஷ் படைகளுக்குக்கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. ஆங்காங்கிருந்த சிறுநில, குறு நில மன்னர்களும் பிரிட்டிஷ் கம்பெனியின் படைகளை எதிர்த்துக் கடுமையான பல போர்களை நடத்தினார்க். ஆங்கிலேயக் கம்பெனிப் படைகளுக்கு பல இடங்களில் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். போரிட்டனர். அடித்து விரட்டினார்கள். மக்களும் கசகமாக அடிபணிந்து விடவில்லை.

ஆங்கிலேய கம்பெனிப் படைகளும் அவர்களுக்கு ஆதரவாகச் சென்ற கிறிஸ்தவப் பாதிரிகளுக்கும் பல இடங்களில் கடும் எதிர்ப்பு இருந்தது. நூறாண்டுகள்:

இவ்வாறு ஏற்பட்ட எதிர்ப்புகளையும் ஆயுத பலத்தாலும் வன்முறைகளாலும் பிரிட்டிஷ் படைகளும் கம்பெனி நிர்வாகமும் பாரத

106