பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசம் முழுவதையும் படிப்படியாக தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வருவதற்கு ஒரு நூறு ஆண்டுகள் ஆயின.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியைப் பற்றி வள்ளலார், கருணையில்லாத ஆட்சி கருதி ஒழிக. என்று பேசினார். பட்டினியால் தவிக்கும் மக்களின் பசியைப் போக்க வேண்டும் என்று கூறி அன்ன சாலைகளை ஏற்படுத்தினார். அன்னிய ஆட்சியார்களின் படைகள், நமது ஆடு, மாடு இனங்களை அடித்துக் கொன்று தின்ற பொழுது, கொலையை நிறுத்துங்கள் ஆடு, மாடு மற்றும் உயிரினங்களைக் காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்தார். தமிழகத்தின் வட பகுதி முழுவதிலும், வள்ளலாரின் தனிப்பெரும் கருனைப் பேரியக்கம் பரவியது.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் அதன் படைகளும் பாரத நாட்டில் நடத்திய கொடுமைகளுக்கு அளவேயில்லை. அதைக் கண்டு பல அதிகார வெறியும் ஆதிக்க வெறியும், கொண்ட பல ஆங்கிலே அதிகாரிகளுக்கும் கூட பொருக்க முடியாமல் பேசியிருக்கிறார்கள். -

எப்படியாயினும் ஒரு நூறு ஆண்டுகள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகளும் அதிகாரிகளும் படைகளும் இந்திய நாட்டில் நடத்திய கொள்ளை, சூரையாடல், படுகொலைகள், அவர்கள் ஏற்படுத்திய சேதங்கள், நாசவேலைகள் வரலாற்றில் எவ்வளவு தான் மூடி மறைக்கப்பட்டாலும், வெளிப்பட்டிருக்கின்றன. அவைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பழிவாங்கும் நோக்கம் பாரத மக்களுக்கு இல்லை. ஆயினும் நடந்த கொடுமைகளும் கொள்ளை கொலைகளும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

பாரத நாட்டின் நாகரிகம் பழம் பெரும் நாகரிமாகும். பல்லாண்டு காலப் பாரம்பரிய கொண்ட பாரத நாட்டின் நாகரிகம், தன் சாகுபடிமுறை, நெசவுத் தொழில், கட்டிடத் தொழில், கலைத் தொழில், கப்பல் தொழில், வியாபாரம், கைத் தொழில்கள், அற்புதமான கோவில்கள், சிற்பங்கள், வழிபாட்டு முறைகள், பாரத நாட்டின் இசைபாட்டு, நாட்டியம் முதலிய அதன் விரிவான திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், பயிற்சி சாலைகள், பல்கலைக்கழகங்கள், அற்புதமான கலை அமைப்புகள் எல்லாம் வரலாறு

பூர்வமானவை.

ஐரோப்பாவில் ஒரு காலத்தில் ரோமானிய, கிரேக்க நாகரிகம் கல்வி முறை, மிகச் சிறப்பாக வளர்ச்சி பெற்றிருந்ததாக வரலாற்றுச் செய்திகள் குறிப்பிடுகின்றனர். ஆனால், போதுமான வளர்ச்சியின்றி காட்டு மிரட்டி நிலையில் இருந்த ஜெர்மானியப் படைகள் ஆல்ப்ஸ் மலையைத் தாண்டி ரோம் நாட்டிற்கு வந்து அவர்கள் நடத்திய கொலை கொள்ளை காரணமாக ரோம நாகரிகம் அழிந்ததாக ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள்

107