பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏராளமான பல அரசியல் கட்சிகளும் உருவாகி செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் அவ்வரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் பிரதிநிதிகளும் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்று அரசியல் நடத்தி வருகிறார்கள்.

இந்திய நாட்டு அரசியல் கட்சிகளில் அனைத்திந்திய அரசியல் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் உள்ளன. நாடு விடுதலை பெற்ற ஆரம் ஆண்டுகளில் மத்திய ஆட்சியிலும் மாநில ஆட்சிகளிலும் சுதந்திரப் போராட்டத்தில் தலைமையாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தான் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது.

1967 ஆம் ஆண்டிற்கு பின்னர், வேறு பல அரசியல் கட்சிகளும் மத்தியிலும் மாநில்களிலும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ளன என கூட்டணிகளும் ஆட்சிப் பொறுப்பை ஏறுறு நடத்தி வருகின்றன.

இந்திய ஜனநாயகத்தில் நாட்டின் அரசியல் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அநேகமாக நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆளும் கட்சிகளாகவும் எதிர்க்கட்சசிகளாகவும் செயல்பட்டு அனுபவம் பெற்றிருக்கின்றன.

தமிழ்நாட்டில் மாநில அரசியல் 1967 முதலே அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இல்லை. திராவிடக் கட்சிகள் என்று பெயர் பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம், அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. இரு கட்சிகளுமே கூட்டணி பலத்தில்தான் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்திருக்கின்றன.

இந்திய ஜனநாயகத்தில் நாம் இன்னும் வெகு தொலைவு முன்னோ வேண்டியதிருக்கிறது. இந்தியப் பாராளுமன்ற ஜனநாயகத்தில், பிரிட்டன், அமெரிக்க, ஐக்கிய நாடுகள் மற்றும் சில மேல்நாடுகளைப் போல் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்னும் நிலைமட்டும்ே இல்லை. இந்திய ஜனநாயகம், இந்திய விடுதலைப் போராட்ட பாரம்பரியத்திலிருந்தும் இந்திய மரபுவழிக் கலாச்சாரத்திலிருந்து எழுந்ததாகும். இதைத்தான்கடந்த ஐம்பது ஆண்டு கால நமது அனுபவம் எடுத்துக் காட்டுகிறது.

இந்திய ஜனநாயகத்தில் மிகவும் தெளிவாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி, பன்மொழிக் கலாசாரமும், பலவிதமான சிக்கலான சூழ்நிலைக்களுக் கிடையிலும், மத்திய- மாநில தேர்தல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அவைகளின் செயல்பாடுகள், இந்திய நாட்டின் அரசியல் கட்சிகள் அவைகளின் செயல்பாடுகள், இந்திய நாட்டின் அரசியல் கட்சிகள், அவைகளின் செயல்பாடுகள், வேற்றுமையின் ஒற்றுமை, முப்பதுக்கும்

113