பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டணி அரசு வெற்றிகரமாக ஐந்தாண்டு காலம் ஆட்சி நடத்திய விந்தை, இவைகளைக் காண முடிகிறது.

மக்தியிலும், மாநில மாநிலங்களிலும் கூட்டாட்சிகளின் தொடர்ச்சி, இந்த வேறுபட்ட சூழ்நிலைகளிலும் ஆட்சிகளின் தொடர்ச்சி, இந்திய மக்களின் பொறுமையான அடக்கமான ஜனநாயக மரபு, அதன் கூட்டுச் கலாச்சாரம், இந்திய அரசு கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிறைவுற்றியுள்ள அரசியல் சாதனைகள், எல்லைப் போர்களில் கண்ட வெற்றி வல்லமைமிக்க ஒன்று பட்ட ராணுவம், நமது விஞ்ஞான வளர்ச்சி, நமது விஞ்ஞானிகளின் அற்புதமான சாதனை. பலவகை ஆத்திர மூட்டல்களும் இடையில் மதவேறுபாடுகளின் புயல்களுக்குமிடையில் நமது மக்களின் ஒற்றுமை, சில வல்லரசுகளின் ஒரு தலைப்பட்சமான பாகுபாடுகள் ஆகியவைகளைதாண்டி பாரதத்தின் ஜனநாயக முன்னேற்றம், பாரதம் ஒரு வல்லரசாக அங்கீகரிக்கப்படும் நிலை, பல துறைகளிலும் பாரதம் உலகிற்கு வழி காட்டும் நிலை, வையத் தலைமையாக பாரதம் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவது முதலிய பல சாதனைகளையும் பெற்று வருகிறது.

இவையெல்லாம் நமது சுதந்திரமான அரசியலின் சாதனைகளாகும்.

பாரத நாட்டின் இன்றைய உள்நாட்டுக் களங்கம்

பாரத நாட்டின் இன்றைய பொது வாழ்வின் மிக முக்கியமான களங்கம் லஞ்சமும் ஊழலுமாகும். லஞ்சமும் ஊழலும் பாரத நாட்டின் பரம்பரைச் சொத்தல்ல. நமது நாட்டின் பாரம்பரியமான சொத்து சத்தியமும் நேர்மையுமாகும். m

சத்திய மேலஜயதே. வாய்மையே வெல்லும் என்பது நமது தாரக மந்திரமாகும். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் நிலவிய கொடுங்கோலாட்சிகளும், கடைசியாக இருநூறு ஆண்டுகளாக பிரிட்டிஷ் அந்நிய ஆட்சி நடத்திய கொடுங்கோலாட்சியும் விட்டு வைத்துள்ள களங்கமாகும். --

பிரிட்டிஷ் ஆட்சியினர் இந்திய நாட்டில் உருவாக்கிய அரசு அரசாங்க நிர்வாகம் முழுக்க முழுக்க லஞ்சமும் ஊழலும் நிறைந்ததாக இருந்தது. காவல்துறை, வருவாய்த்துறை அனைத்தும் முழுமையாக ஊழல் மயமாக இருந்தது.

போலீஸ் இலாக்காவின் லஞ்ச ஊழலுக்கு இரண்டு கதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

வேதம் புத்துர் என்னும் ஒருவர் அங்கு ஊரில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. அந்த ஊரைச் சுற்றிலும் சுமார் 30 கிராமங்கள் இருந்தன. அந்த 30 கிராம கிராமங்களுக்கும் தலைமையான ஊர் வேதம்புத்துார். அந்த வேதம்

114