பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்துர் மிகவும் செழிப்பான கிராமம். அதைச் சுற்றியுள்ள உள்ள 30 ஊர்களிலும் சுமார் 30க்கும் மேற்பட்ட கண்மாய்க்கள் இருந்தன. அந்த கிராமங்கள் நிறைந்து பள்ளத்தாக்கின் தலைமையான ஊர் வேதம் புத்துர் மலைத் தொடரில் ஒரு பலமான மழை பெய்தால் அந்த பூமியில் உள்ள கண்மாய்கள் நிரம்பிவிடும். ஒன்று அல்லது இரண்டு சாகுபடிக்கு உத்திரவாம். நெல், கரும்பு, பருத்தி, வேர்க்கடலை, பயிறு வகைகள் நன்கு விளையும் புண்ணிய பூமி. தென்னாடு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்த போது இருந்த வேத பூமியும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து விட்டது. வேதம் புத்துாரில் ஒரு போலீஸ் ஸ்டேஷன். அந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள உடுப்பணிந்த போலீஸ் 20 பேரின் பலத்தில் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர். அந்த போலீஸ் ஸ்டேஷனின் மேல் அதிகாரி ஒரு சப்- இன்ஸ்பெக்டர். அவருடைய அதிகாரத்தின் கீழ் இரண்டு ஏட்டும், 20 போலீசும்.

அந்த சப்- இன்ஸ்பெக்டரின் பெயர் கோபாலகிருஷ்ண நாயுடு மிகவும் நல்ல நாணயமான மனிதர். அவர் உடுப்பணிந்து கொண்டு ஊருக்குள் வந்து விட்டால், தெருவில் உள்ள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். அவருடைய அதிகாரத்தின் உள்ள அந்த போலீஸ் ஸ்டேஷனின் ஏதாவது வழக்குகள் வந்தால் அவர் பெரும்பாலும் ரிக்கார்டுக்காக ஒன்றிரண்டு கேஸ்கள் தவிர மற்றவைகளைத் தானே முடித்துவிடுவார். பெரும்பாலும் ராசி செய்து விடுவார். ஆனால் பணம் கொடுக்காமல் சமரசம் செய்யமாட்டார்.

பெரிய அடிதடி, ஊர்ச் சண்டை இன்னும் கொலை கேசைக் கூட ராசி பண்ணிவிடுவார். அவருடைய தர்பாரில், ஏதாவது ஒரு கேஸ்வந்து விட்டால் இரு தரப்பாரையும் தனித்தனியாக அழைத்துப் பேசுவார். உங்கள் கேஸ் கோர்ட்டிற்குப் போனால் வக்கீல் பீஸ், கோர்ட் பீஸ் என்று ஆளுக்கு ஐநூறு, ஆயிரம் என்று செலவாகும். ஆளுக்கு நூறு ரூபாய் கொடுங்கள் ராசி பண்ணி விடுகிறேன். எதுக்கு கோர்ட்டும் கேசும் என்பார். ரூபாய் 100 என்பது அக்காலத்தில் பெரிய பணம், எனவே பார்ட்டி ரூ.100 என்றால் கஷ்டம் என்று கூறி சப்- இன்ஸ்பெக்டர் காலில் விழுந்தால், ரூ.100 என்பது ரூ.50 ஆக குறையும், அதிலிருந்து ரூ.20 ஆககுறையும். ஒவ்வொரு தடவையும் பார்ட்டி, சப்-இன்ஸ்பெக்டர்காலில் விழ விழ ரூபாய் குறையும். பின்னர் ரூபாய் போய் ஆளுக்கு ஒரு முட்டைக் கோழி கொடுத்துவிட்டு ராசி பண்ணிட்டு போங்க என்பார். அதுவும் முடியலை என்றால் கடைசியில் ஒரு கட்டு சொக்கலால் பீடியும் தீப்பெட்டியும் கொடுத்துவிட்டு சமரசம் செய்து கொண்டு போங்க என்று கூறுவார். o

அவருடைய நண்பர்கள் என்ன சார் ரூ.100லிருந்து ஒரு பீடிக்கட்டுக்கும் தீப்பெட்டிக்கும் வந்து விட்டீர்கள் என்று கேட்டால், அதெப்படி சார் ஒரு

115