பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடிக்கட்டு தீப்பெட்டி கூட இல்லாமல் கேஸை ராசி பண்ணி வைக்கிறது என்று சொல்லுவார். என்ன சண்டை, வழக்கு என்று போனாலும், கொஞ்சம் பணத்தோடு போனால் இந்த சப்- இன்ஸ்பெக்டரிடம் கேஸ் இல்லாமல் செய்து கொள்ளலாம் என்று மக்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. இவ்வாறு போலீஸ் ஸ்டேஷன் என்றால் பணம் இருந்தால் எதுவும் நடக்கும் ன்ெறு . அந்தக் காலப் பழக்கம்.

அது போல், வருவாய்த்துறை அலுவலகம், நீதிமன்ற சிப்பந்திகள், வரிவசூல் அதிகாரிகள், அலுவலகம் எங்கு சென்றாலும் வரி பாதி, வசூல் பாதி அதெல்லாம் மேல் வரும்படி.

இவ்வாறு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. ஆஸ்பத்திரிகளில் கூட சம்திங் இல்லாமல் வேலை நடக்காது. எங்கள் ஊரில் ஒரு படித்தபையன் கலெக்டர் ஆஸ்பிஸ் குமாஸ்தாவாக வேலை பார்த்துக் கொண்டிருந்தால் அந்த குமாஸ்தாவிடம் அந்தப் பெரியவர். தம்பி உனக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்பார். மாதம் ரூ.110/ என்று சென்னால் மேல் வரும்படி என்ன கிடைக்கும் என்று கேட்பார். இவையெல்லாம் சகஜமான சம்பாஷணை.

எனவே நாடு முழுதும், அரசாங்க அலுவலகங்கள் முழுவதும் எல்லா இடங்களிலும் லஞ்சம் ஊழல் இல்லாத இடம் இல்லை. அப்படி ஒரு ஆட்சி ஆங்கிலேயர் அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சி நடைபெறுகிறது.

சமுதாயம் முழுவதையும் கல்விப் பிடித்திருக்கும். இந்தத் தொத்து நோயைக் கடுமையான முயற்சியின் மூலம்தான் சற்று குறைக்க முடியும். ஆனால் அதை செய்தே ஆக வேண்டும்.

இந்தத் தொத்து நோய் சில அரசியல் கட்சிகளுக்கிடையிலும் பலமாக பரவியிருக்கிறது. எனவே லஞ்ச ஊழலைக் குறைக்க ஒரு சமுதாய இயக்கமே நடைபெற வேண்டும். இது நமது நாட்டு அரசியலில் ஒறரு முக்கியமான அங்கமாக, கடமையாக இப்போது உள்ளது.

நாட்டின் நிர்வாகத்தில் எல்லாத் துறைகளிலும் லஞ்சம் ஊழல் நிரம்பியிருக்கிறது. நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும் லஞ்ச ஊழல் பரவியிருக்கிறது. தேர்தல் பணிகள் அனைத்திலும் லஞ்சம் பரவியிருக்கிறது. இந்த நிலை நாட்டில் உள்ள அனைவரும் அறிந்த விஷயம். இதுபற்றி விவரித்துக் கூற வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த லஞ்ச ஊழல் குறைப்பு ஒழிப்பு வேலைகளை எங்கிருந்து தொடங்குவது. இதை மேல்மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும். கட்சிகள், அரசாங்க நிர்வாக அமைப்புகள் ஆகியவைகளின் மேல் மட்டங்களிலிருந்து துவங்க வேண்டியதிருக்கிறது.

நகர அமைப்புகள்: பாரத நாட்டின் நகர அமைப்புகள் பாரம்பரியம்

116