பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக்கது. வற்றாத வளம் நிறைந்தது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அன்னியர் ஆட்சி காலத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நமது கால்நடைச் செல்வத்திற்கு ஏற்பட்ட சேதம், நஷ்டம் ஆகியவை சொல்லொணாதது. ஆயினும் இன்று நமது நாடு கால்நடை செல்வத்தில் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ளது. நாம் நமது முட்டை, பால், பால் பொருள் ஆகியவற்றை நமக்குப் போக உபரியாக உள்ளவற்றை ஏற்றுமதி செய்கிறோம். மேலும் அந்த செல்வத்தைப் பெருக்குவதற்கு ஏராளமான வாய்ப்புகளும் உள்ளன. கண்ணாபிரான் அருளும், ஆசீர்வாதமும் நமக்கு உண்டு. அதுள்ளவரை நமது கால்நடைச் செல்வத்திற்கு குறைவேயில்லை. நமது தட்பவெப்பநிலையும் அதற்குச் சாதகமானது.

நமது சாகுபடித் தொழிலும், கால்நடை வளர்ச்சியும் இருக்கும் வரை நமது நாட்டை வெல்வதற்கு யாரும் இல்லை. ஆனானப்பட்ட ஆங்கிலேய அரக்கர்களளும் 200ஆண்டுகள் நடத்திய அழிவு வேலைகளையும் சமாளித்து இன்று நமது உலகில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது.

நமது தொழிலும் தொழில் பாதுகாப்பும்

நமது தொழிலுக்கும், தொழில் வளர்ச்சிக்கும், தொழில் பாதுகாப்புக்கும் அந்நிய ஆட்சியாளர்களால் ஏற்பட்ட பாதிப்புக்கும் படு நாசத்திற்கும் அளவே இல்லை. =

நமது விவசாயத்தையும், கடல் சார்ந்த தொழில்களையும், கால்நடைகள் சார்ந்த தொழில்களையும் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமானதுமாகும். அதேவே நமது சுதேசி இயக்கத்தின் அடிப்படையாகும். இந்த நமது பாரம்பரியமான தொழில்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். இவைகளை மேம்படுத்தலாம். அது தேவையும் கூட சமுதாய வளர்ச்சியை ஒட்டிச் சமுதாயத்தின் தேவைகளை ஒட்டி, தொழில் நுட்ப முறைகளில் அபிவிருத்தி கண்டு, தொழிலையும், தெர்ழில் முறைகளையும் உற்பத்திக் கருவிகளையும் உற்பத்தி சாதானங்களையும் மேம்படுத்துவதும், அபிவிருத்தி செய்வதும் அவசியமாகும். நாம் அதைச் செய்து கொண்டு வந்திருக்கிறோம். உற்பத்தி முறைகளில் அபிவிருத்தி காண்டிருக்கிறோம்.

ஆங்கிலேயர்கள் முதலில் வாணிபத்திற்காக இந்தியவிற்கு வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே இந்தியாவிலுள்ள நேர்த்தியான பல உற்பத்திப் பொருள்களை குறைந்த விலைக்கு, வாங்கிக் ரெண்டு போய் ஐரோப்பாவில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்தார்கள். இந்தியாவின் உள்நாட்டுச் சந்தைகளிலும் கிராமங்களிலும், உள்நாட்டுத் தரகர் மூலமும் சில நேரங்களில் அடிதண்டாவுடனும் பின்னர் ஆயுத பலத்துடனும் நமது சரக்குகளைக் குறைந்து விலைக்கு வாங்கினார்கள்.

120