பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கிலேயர்களுக்கு இந்திய தளம் அமைந்து விட்டதால், ஐரோப்பிய வியாபாரத்தில் அவர்கள் முதலிடத்தைக் கைப்பற்றிவிட்டார்கள். அத்துடன் செல்வப் பெருக்கம் காணுவப் பெருக்கம், போர்களில் வெற்றி, அரசியல் ஆதிக்கம் அதிகாரம், செல்வாக்கு முதலிய சாதக சூழ்நிலைகளை வைத்து ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கம் பெருகிற்று.

நீராவி சக்தி கண்டு பிடிக்கப்பட்டது. ரயில், கப்பல், எந்திரங்கள், நீராவி சகதி கொண்டு ஒட்டப்பட்டது. பிரிட்டனில் உற்பத்திக் கருவிகளில் பெரிய மாற்றமும் அபிவிருத்தியும் ஏற்பட்டது. பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளிலும் தொழில் புரட்சி ஏற்பட்டது. காலனிகள் மூலம் கிடைத்த செல்வம் தொழில் புரட்சியை வேகப்படுத்த உதவியது. உற்பத்திக் கருவிகளில் மாற்றமும், உற்பத்தி முறையில் அபிவிருத்தியும் ஏற்பட்டது.

இந்திய நாடு படிப்படியாக உற்பத்தி செய்து உபரியாக இருந்த நிலையிலிருந்து மாற்றம் பெற்ற, மூலப் பொருள் பண்ணை நாடாகவும், பிரிட்டிஷ் சரக்குகளை விற்பனைக்கான சந்தையாகவம் தாழ்ச்சியுற்று மாறியது. பிரிட்டன் தனது அரசியல் ஆட்சி பலத்தாலும், ஆயுத பலத்தாலும், பலவிதமானவன் முறைத் தலையீடுகள் மூலமும் இந்திய நாட்டைத் தனது சந்தையாகவும், மூலப் பொருளுள் பண்ணையாகவும் மாற்றியது. அதில் முக்கியமான இந்திய நாட்டில் இருந்த தொழில்களை நசுக்குவதற்கு அந்நிய அரசு எடுத்துக் கொண்ட முயற்சி கொடுமையானது.

முதலாவதாக நெசவுத் தொழிலை எடுத்துக் கொள்ளுங்கள். துணி என்பது மக்களுடைய முக்கிய தேவையில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. அதிலும் இந்திய போன்ற உஷ்ணப் பிரதேச நாடுகளைக் காட்டிலும் குளிர்ப்பிரதேசங்களான ஐரோப்பிய நாடுகளில் துணி தேவை அதிகம்.

இந்திய நாடு

18 ஆம் ஆண்டிற்கு முன்பு, துணி உற்பத்தியில், அதன் தரத்தில் அளவில் நேர்த்தியில் ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடம் பெற்றிருந்தது. உலகப் புகழ் பெற்ற மஸ்லன் துணி உற்பத்தியில் பாரதம் பெரும் புகழ் பெற்றிருந்தது. துணி உற்பத்தி இந்தியாவில் அபரிமிதமாக இருந்தது. இந்திய விவசாயிகள் மிகவும் நேர்த்தியான பருத்தி, உற்பத்தி செய்தார்கள்.

தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியைத் தாங்களே வீட்டிற்கு கொண்டு வந்து அதை உலர்த்தி சுத்தம் செய்து, கை மணைகளிலே கொட்டை நீக்கி பஞ்சாக்கு வார்கள். அந்தப் பஞ்சை சுத்தம் செய்து அதை வில் கருவி மூலம் வெட்டி எடுத்து மிகவும் நேர்த்தியான நூல் நூற்கத்தக்க கைப்பஞ் சாக்குவார்கள். அப்போது கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் நூல் நூற்கும் கைராட்டினங்கள் இருக்கும். கிராமத்துப் பெண்கள் ஒய்வான நேரத்தில் நூற் நூற்பதை வேலையாகக் கொள்வார்கள். நாடு முழுவதிலும்

121