பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் அனைவரும் ஒய்வு நேரங்களில் சில சமயம் முழு நேரமும் கை ராட்டினங்களில் நூல் நூற்றால் எவ்வளவு நூல் உற்பத்தியாகும். அவ்வாறு அளவு கடந்த நூல் உற்பத்தியாயிற்று.

இவ்வாறு கிராமங்களில் உற்பத்தியாகும் பருத்தி நூல், பட்டு நூல், கம்பளி நூல் ஆகியவைகளை நெசவாளர்கள் வாங்கிச் சென்று நூல்களைத் தரம் பிரித்து தேவைப்படும் அளவுக்கு முறுக்கேற்றியும் பசை ஏற்றியும் பதப்படுத்தி நெசவு செய்வார்கள். அந்தத் துணி மடிமடியாக நாடெங்கும் உலகெங்கும் செல்லும்.

மதுரைகடை வீதியில் மடிமடியாகத்துணி மூட்டைகள் விற்பனைக் வந்து குவிந்திருக்கும் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். கடலின் அலைகளின் நூறையைப் போல மெல்லிய அழகான துணி ஆடைகளை அணிவித்து இராவணன் தனது தம்பி கும்ப கருணனைப் போர்க்களத்திற்கு அனுப்பினான் என்று கம்பர் குறிப்பிடுகிறார். இவ்வாறு தமது நாட்டு நெசவுத் தொழில் காப்பியப் புகழ் பெற்றது, காவியப் புகழ் பெற்றது.

இத்தகைய சிறப்பு மிக்க நமது நாட்டு நெசவுத் தொழிலை ஆங்கிலேய ஆட்சியினர் திட்டமிட்டு அழித்தார்கள். நல்ல பருத்திக்கு அதிகமானவர்களைப் போட்டு சன்னரகப் பருத்திக்குத் தடை விதித்தார்கள். பருத்தி விளையும் நிலத்திற்கு அதிக வரியைப் போட்டார்கள். பருத்தி உற்பத்திக்கும் விலையில் சரி பாதி வரியாகப் போட்டார்கள். பருத்தி உற்பத்திக்கு மட்டுமல்ல, பருத்தி விற்பனைக்கு, பருத்தி கொண்டு செல்லும் வண்டிகளுக்கும், வண்டி மாடுகளுக்கும் வரி போட்டார்கள். நூலுக்கு துணிக்கும் வரி போட்டார்கள். நெசவாளர்களை அடித்துக் கொன்றார்கள். அவர்கள் நெசவு செய்யும் விரல்களை வெட்டினார்கள். இந்தியத் துணிகளுக்கு பிரிட்டனில் அதிகமான வரியைப் போட்டார்கள்.

இவ்வாறெல்லாம் பல கெ ாடுமையான முறைகளைக் கையாண்டு இந்திய நாட்டு நெசவுத் தொழிலை அழித்தார்கள். இத்தனை கொடுமைகளையும் தாங்கி தாண்டி இந்திய கைத்தறி துணியும் பட்டுத் துணியும் இன்னும் நீடிக்கிறது. -

அடுத்த்தாக ஆங்கிலேய ஆட்சியினர் செய்த அழிவு வேலை நம்முடைய துறைமுகங்களை அழித்ததாகும். நமது நாட்டு மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டது. நமது கிழக்குக் கடற்கரையிலும் மேற்கு கடற்கரையிலும் ஏராளமான பல துறைமுகர்கள் இருந்தன. கப்பல் போக்குவரத்திலும் கடல் வாணிபத்திலும் இந்திய நாடு வரலாற்றுப் புகழ் பெற்றது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வந்த போது கல்கத்தாவில் மிகப் பெரிய துறைமுகமாக இருந்தது. அங்கு மிகப் பெரிய கப்பல் கட்டுமானத் தொழில் மிகவும் பெரிய அளவில் நடந்து ாெண்டிருந்தது. அதைக் கப்லத் துறையை ஆங்கிலேயர்கள் திட்டமிட்டே அழித்தார்கள். இவ்வாறு இந்திய நாட்டின் பல

122