பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைப்புக் காட்டி வருகின்றன.

இவைகளில் ஜெர்மனியும் ஜப்பானும் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி நடத்தி தோல்வி கண்டு பெரும் நஷ்டத்திற்காளானவர்கள் யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியால் பல நிபந்தனைகளுக்குட்பட்டு அடந்தியிருந்தவர்கள். கடந்த 50 ஆண்டுகளில் பல கட்டுப்பாடுகளையும் சமாளித்து இன்று உலகப் பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள 7 நாடுகளின் ஒன்றாக வெளிப்பட்டு விட்டன. அவர்களுடைய நாணயங்கள், மார்க் (ஜெர்மனி), யென் (ஜப்பான்) வலுவாக உலகச் சந்தையில் நிலவுகின்றன. மேலும் பலப்பட்டு வருகினறன. உலக நாணயச் சந்தையில் அதிக மரியாதை பெற்று வருகின்றன.

ஐரோப்பிய நாடுகள், உலகச் சந்தையின் போட்டியின் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஐரோப்பிய கூட்டமைப்பை உண்டாக்கிக் கொண்டு, யூரோ என்னும் பெயரில் புதிய நாணயத்தை உருவாக்கி கொண்டு உலகச்சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலுகிறது. ஜப்பான் தனது ஆசிய முகத்தைக் காட்டிக் கொண்டு தென் கிழக்கு ஆகிய நாடுகளுடன் அதிக நெருக்கம் வைத்துக் கொண்டு அமைதியாக அமெரிக்காவிற்கே சவால் விடுகிறது.

இவ்வாறு உலகின் மொத்த உற்பத்தியிலும் சந்தைப் பங்கிலும் சுமார் எழுபது சதவீதம் வரையிலும் தனது செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருக்கும் ஏழு பெரிய பொருளாதார வல்லரசுகளும் மூன்று பிரிவாக இருந்து ஒன்றையொன்று உ கி ஆதிக்கத்திற்காக மோதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்நாடுகள் தங்களை ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்வதற்காக பலச் சலுகைகளையும் உலக நாடுகளுக்குக் காட்டி வருகின்றன.

உலக வர்த்தக சபை என்பது ஐக்கிய நாடுகள் சபையைப் போல் அல்லாமல், பெரிய நாடு, சிறிய நாடு என்றில்லாமல் ஒரு நாட்டிற்கு ஒருவாக்கு (ஒட்டு) என்னும் அடிப்படையில் அமைதிருக்கிறது. எனவே எந்த ஒரு நாடும் அங்கு தனது ஆதிக்கத்தைச் செலுத்துவது சற்று கடினம். ஐ.நா. சபையைப் போல், பாதுகாப்பு கவுன்சில், .... அதிகாரம் கொண்ட வல்லரசு நாடுகள் என்ற நிலைமை உலக வர்த்தக சபை அம்ைப்பில் இல்லை. எனவே இச்சபையில் இந்தியா போன்ற பெரிய நாடுகள் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இதர ஏழை நாடுகளின் பொருளாதார நலன்களுக்குச் சாதகமாகக் குரல் கொடுக்க முடியும்.

இதற்கிடையில், உலக வர்த்தகச்சபை உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் கொள்கைகளை செயல்படுத்துவதில் வல்லரசு நாடுகளின் செயல்பாடுகளின் அனுபவத்தில், உலக நாடுகளில் புதிய பல சேர்மானங்களும் உருவாகி வருகின்றன. சார்க் நாடுகள், தென் கிழக்கு ஆசிய

124