பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள் என்னும் கூட்டமைப்புகளும் பொருளாதார மையங்களும் உருவாகி வருகினறன. சீனா, இந்தியா போன்ற மக்கள் தொகையில் பெரிய நாடுகளாக உள்ள வளர்முக நாடுகளும், பொருளாதாரத் துறையில் வலுவான நாடுகளாக வளர்ந்து வருகின்றன.

தென் கிழக்கு ஆசியப் பகுதியில் அங்கீகரிக்கப்படாமல் இருந்த வியட்நாம், அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போரினால் அவதிப்பட்ட நிலையிலிருந்து எழுந்து நிற்கத் தொட ங்கியிருக்கிறது. அதன் விவசாய உற்பத்திப் பொருளாதாரம் நிலை.ெ பற்று வருகிறது. அமெரிக்காவின் இடையூறுகள் பல இருந்த போதிலும், அதன் உற்பத்தி வளர்ச்சி, ஆண்டிற்கு 5 (ஐந்து) சதவீதத்திற்கு மேல் பெருகி வருகிறது. அதனால் இதுவரை அமெரிக்காவிற்கு பயந்து கொண்டிருந்த சில நாடுகளும் பொருளாதாரத் துறையில் வியட்நாமை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவிற்கும் வியாட்நாமிற்கும் நல்லுறவு பொருளாதார உறவு அபிவிருத்தி அடைந்து வருகிறது.

வியட்நாமில் விவசாய உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கிராமப் பகுதிகளிலேயே மறு உற்பத்தி செய்யப்பட்டு உற்பத்திச் செலவு முறையில் விநியோகம் நடைபெறுவதால் விலை வாசிகள் ஸ்திரமடைந்து மக்கள் வாழ்க்கை நிலை அபிவிருத்தி அடைந்து வருகிறது. இதனால் தொழில் உற்பத்தியின் செலவும் குறைந்து வருகிறது.

அதனால் வியட்நாமின் வெளிநாட்டு வர்த்தகம், அபிவிருத்தி அடைவதற்கு குறிப்பாக அண்டை நாடுகளுடன் பொருளாதார நல்லுறவை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் உலக செல்வாக்கு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் உலக வர்த்தக சபை போன்ற அமைப்புகளில் பெரிய வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. அத்தகைய முயற்சிகளுக்கு சுதந்திரம் ஜனநாயகம் பாரம்பரியமிக்க இந்தியா போன்ற நாடுகள் முன்னணியில் நிற்க வேண்டும்.

உலக வர்த்தக அமைப்பு

19ம் நூற்றாண்டில் நவீன தொழில்களிலும் வர்த்தகத்திலும் சுதந்திர வர்த்தகம் என்றும் முறையில் பிரிட்டன் முன்னணியில் நின்று ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா, பிரிட்டிஷ் கலானி ஆதிக்க ஆட்சியின் கீழ் இருந்தும் இந்தியாவின் செல்வ பலமும் சந்தை பலமும் இதர கொள்கையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்தும் பிரிட்டனுக்கு உலக வர்த்தக அரங்கில் தலைமை நிலை கொண்டிருந்ததற்குக் காரணமாக இருந்தது.

125