பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்றம் காண வேண்டும்.

அந்நிய உதவியுவன் ஆன பெரிய தொழில்களிலும் அனைத்து துறைகளிலும் நமது பங்கை அதிகரிக்க வேண்டும். உதிரி பாகங்களின் உற்பத்தியை சிறு தொழில்கள் மூலம் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் நமது தொழில்களின் சுதேசித் தன்மையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

சுதேசிக் கல்வி தொழில் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும் சுதேசித் தன்மையை அதிகரிக்கச் செய்யும். சிறு தொழில் துறையில் சுதேசித் தன்மையை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

நமது ஜவுளித் தொழில், ரயில்வே, கப்பல் கட்டும் தொழில், விமானம் கட்டும் தொழில், ஆட்டோமொபைல் சாதனங்கள் உற்பத்தி, ஆயுத உற்பத்தி, இரும்பு உருக்குத் தொழில் முதல் பல தொழில்களிலும் சிறு தொழில்களும் துணைத் தொழில்களும் நமது நாட்டில் இயல்பாகவே வளர்ச்சி பெற்றிருக்கின்றன. அவைகளை மேலும் மேலும் அதிகமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். இவையனைத்திலும் சுதேசியத்தை வளர்க்க வேண்டும்.

அப்போது அமெரிக்க ஐரோப்பிய போட்டிகளை சமாளிக்க முடியும். சிறிய நாடுகளுக்கு உதவி செய்ய முடியும். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுடன்

நல்லுறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

4. நான்காவதாக சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக சரீரப் பயிற்சியை பாரதி குறிப்பிடுகிறார்.

சரீரப் பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கு மிகவும் அவசியம் என்பதை ஆனைவரும் அறிவர். அதில் நமது பலவீனம் நடிக்கிறது.

உலக விளையாட்டுப் போட்டிகளில் இந்திய நாடு மிகவும் பின் தங்கியிருக்கிறது. அந்த நிலை பாரதி காலத்திலிருந்து இன்னும் நீடிக்கிறது. இந்தத் துறையில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள் மட்டுமல்ல. தனியான பல்கலைக்கழகங்கள் நிறுவி தனி கவனம் செலுத்த வேண்டும்.

ஊர் தவறாமல், கிராமம் தவறாமல், நகரங்களில் வார்டு தவறாமல் பல வகையான உடற் பயிற்சி மையங்களும் விளையாட்டு போட்டி மையங்களும் உருவாகக் தனிப்பயிற்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் மாநில அரசுகள் முனைப்பு காட்டவே தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. சாதிச் சண்டை மதச்சண்டைகளை நிறுத்தி விளையாட்டு போட்டிகளை அதிகரிக்கப்படுத்தலாமே.

இதில் மாநில அரசுகளும் உள் ஆட்சி அமைப்புகளும் தனியார் அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டும். பாரதியின் ஆத்மா மகிழ்ச்சியடைய வேண்டும்.

127