பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியக் கல்வி:

சுதேசியம் என்பதில் தேசியக் கல்வி என்பது முக்கிய இடம் பெறுகிறது. மகாகவி பாரதியார் கல்விக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துப் பாடல்கள் பாடியுள்ளார். கவிதைகள் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்பதைத் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

தேசம் என்பது குடிகளின் தொகுதி இது கொண்டே நமது முன்னோர் குடிக்காட்டுகளினின்று விலகி நிற்போரைப் பரதேசிகள் என்றனர் போலும்’ என்று பாரதி குறிப்பிடுகிறார்.

தேசக் கல்விக்கு குடும்பக் கல்வியே வேர் என்று பாரதி கூறுகிறார்.

தேசக் கல்வி பற்றி மகாகவி பாரதி கூறியுள்ள கருத்துக்கள் பற்றி மிகவும் விரிவாக ஆராய வேண்டும். அது பற்றி புதிய திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் பாரதம் உலகில் முதலிடம் பெற முடியும்.

தேசியக் கல்வி பற்றி மகாகவி பாரதி, தனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் கதைகளிலும் மிகவும் விரிவாகப் பேசியுள்ளார். அவைகளை இன்றையக் கல்வியுடன் இணைத்து விரிவாகப் பேசுவது அவசியம். எனவே, அதுபற்றி தனியாக ஆய்வு செய்யலாம். தனி நூலே எழுதலாம். இதன் தொடர்ச்சியாக மகாகவி பாரதியும் தேசியக் கவியும் என்னும் தலைப்பில் தனி நூல் வெளிவர விடுக்கிறது.

தேசியக் கல்வி என்னும் தலைப்பில் “தேசக் கல்விக்கு குடும்பக் கல்வியே வேர் என்று மகாகவி குறிப்பிட்டுள்ளது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

‘வீட்டுப் பழக்கம் தான் நாட்டிலுஈம் தோன்றும் வீட்டில் யோக்கியன் நாட்டிலும் யோக்கியன் வீட்டில் பொறுமையுடையவன் மனைவியின் பொருளைத் திருட மனம் துணிந்தோன். கோயிற்பணத்தைக் கையாடக் கசமாட்டான். தான் பெற்ற குழந்தைகளுக்கிடையே பசுபாதம் செய்பவன். ஊரில் நியாயாதிபதியாக நியமனம் பெறத்தக்கவன் ஆகமாட்டான். குடும்பம் நாகரிக மடையாவிட்டால் தேசம் நாகரிகமடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடில் தேசதில் விடுதலை இராது.

ஒரு குடும்ப்ததார் கூடித்துன்மில்லாமல் வாழ்வதைக் காட்டு மிருகங்களும் பிற மனிதரும் தடுக்காத வண்ணமாக ஆதியில் மனிதர்காட்டை அழித்து வீடு கட்டினார்கள். பல வீடுகள் கூடி ஊர் ஆயிற்று.

விடு என்ற சொல்லுக்கு விடுதலை எவ்பது பொருள் வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழத்தகுந்த இடத்துக்கு விடு என்று பெயர்

128