பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த விருத்தத்தை விளைவிக்கத்தக்கது’ என்று எழுதுகிறார்.

“ஆம் ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத் தொகை நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல, வாலில் நெருப்பு பிடித்தெரியும் போது துங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும் போது பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும் போதே தூங்குகிறார்கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்’ என்று மகாகவி எழுதுகிறார்.

பஞ்சமர்களின் விஷயமாக அகண்ட பாரத ஹிந்து சபையின் காரியத்தரிசி பூர் ரத்னசாமு என்பவருக்கு ரீ காசி ஹிந்து சபையின் தலைவராகிய வைதிகமணி ரீமான் பகவான்தாஸர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஒரு நல்ல யோசனை சொல்லுகிறார். பறையர்களுடைய தீண்டாமையை உடனே நீக்கி விட வேண்டும். கசி நவத்வீபம், பிருந்தாவனம் என்ற ஸ்தலங்களில் உள்ள பண்டிதர்களும் இவ்விஷயமாக உடனே உத்தரவு கொடுக்க வேண்டும்.

பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது சம்மந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது மேற்படி ரத்னசாமு முதலிய தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை கூறவில்லை. ஹிந்துக்களுக்குள் இதர வகுப்பினர் பந்தி போஜனம் சம்மந்தங்கள் இல்லாதிருக்கும் வரைபஞ்சமரும் அப்படியே இருக்கலாமென்று ஸ்ரீ ரத்னசாமு சொல்லுகிறார். ஆனால் பஞ்சமரின் சேரிகளிலே கிறிஸ்துவப் பாதிரிகள் பள்ளிக் கூடங்கள் முதலியன வைப்பது போல் நமது குருக்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு ஹிந்து மதோபதேசம் செய்யும் கடமையாரைச் சேர்ந்தது. அதற்குப் மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆள் அனுப்பவில்லை.

ஹிந்து தர்மத்தின் மஹிமையை நன்றாக அறிந்தோர் இஹலோக வாழ்க்கையில் எத்தனை கொடுரமான கஷ்ட நிஷ்டுரங்கள் நேரிட்டாலும் இந்து தர்மத்தைக் கைவிட மாட்டார்கள். உலகத்தில் நிகரற்றதாகிய வறுமையானது நமது தேசத்தை வந்து பிடித்துக்கொண்டகாலமுதலாக நமது நாட்டார் பசியாலும் அதனால் ஏற்படும் நோய்களாலும் லக்ஷக்கணக்காக அகால மரணத்துக்கிரையாகி வருகிறார்ககள். பசித்துன்பம் எல்லோருக்கும் மெதுவாக இருந்தாலும், கீழ் வகுப்பினருக்குள் அதிகமாக பாதிக்கிறது. நாட்டில் பஞ்சம் நேரிட் டால் பஞ்சமர் முதலிய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அதிகமாக சாகிறார்கள். பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும், நம்மைப் போல் ஹிந்துக்களான் பாதையும் விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும் மடாதிபதி புரோஹிதர் குருக்கள் முதலியவர்கள் சற்றே மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.

‘அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழு

133