பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

ஹறிந்துக்கள் யார்?

வேதத்தை நம்புவோர்

  • ருத்ரன், நாராயணன், குமாரன் முதலிய தேவர்கள் ரிஷிகளால் ஒன்றாகக்

கருதி வணங்கப் பெற்றோர். ஒரே தெய்வத்தை இங்ஙனம் பல பெயர் கூறி வணங்கியதாக அந்த ரிஷிகளே சொல்லியிருக்கிறார்கள்.

நல்ல காலம்

ஹிந்து மதம் ஒன்று. ஆகவே வைஷ்ணவ சமயாச்சாரியார் சைவ சமயாச்சாரியார், சங்கரமடத்தார் முதலிய குருக்களெல்லாம் தமது பிரதிநிதிகள் மூலமாக ஒன்று கூடியோசனை செய்து ஹிந்துக்களுடைய ஜனத் தொகை குறையாமல் பாதுகாப்பதற்கு வழி செய்ய வேண்டும். பிற மதங்களிலிருந்து ஜனங்களை நமது கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளவதற்கு வழிகளென்ன என்பதைப் பற்றி யோசனை செய்ய வேண்டும். தெய்வம் ஹிந்துக்கள் மீது கடைக்கண் செலுத்தி விட்டது. நாம் கும்மிடும் சிலைகளெல்லாம் வெறும் கல்லும் செம்புமல்ல. மனிதர்களாகவே சீர்படுத்த முடியாதபடி அத்தனை கெட்ட நிலைமையில் ஹிந்துக்கள் வீழ்ந்த சமயத்தில் மேற்படி தெய்வங்கள் காப்பாற்றக் கருத முற்பட்டு நிற்கின்றன. நமக்குள்ளே மஹா ஞானிகளும் சித்த புருஷர்களும் அவதரித்து விளக்குகிறார்கள். ஹிந்துக்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இதனை எல்லோரும் தெரிந்து நடக்க வேண்டும்’ என்று மகாகவி மிகவும் நம்பிக்கையுடனும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கைவூட்டும் வகையிலும் தீர்க்க தரிசனத்துடன் எழுதுகிறார். -

நாற்குலம்- சதுர்வர்ணம்

மகாகவி பாரதியார், தனது கண்ணன் பாட்டுகளில், கண்ணன்- என் தந்தை என்னும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

நாலு குலங்கம் அமைத்தான்- அதை

நாச முறப்புரிந்தனர் மூட மனிதர். சிலம் அறிவு தருமம்- இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவதாம்

மேலவர் கீழவர் என்றே வெறும்

வேத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்

போலிச் சுவடியையெல்லாம்- இன்று

135