பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனமோ அவமானமோ என்றும்

‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டுபோகவோ

நாங்கள் சாகவோ . என்றும்

“சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமா? - ஜீவன் ஒயுமோ? இதயத்துள்ளே இலக்கு மகாபக்தி ஒடுமோ நெஞ்சம் வேகுமோ? என்று பாரதி பாரதி பாடுவது நெஞ்சை உலுக்குவதாகும்.

ஒத்துழையாமை இயக்கங்கள், சட்ட மறுப்பு போராட்டங்களும் நடைபெற்ற காலத்தில், தேச பக்தர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் இப்பாடல்களை வீரத்துடன் பாடி மகிழ்ந்தனர்.

இத்துடன் நடிப்புச்சுதேசிகளைப் பற்றியும் வேடிக்கையாகப் பாடுகிறார். ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்

திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடி-கிளிளே

வாய்ச் சொல்லில் வீரரடி’

என்பது அப்பாடலின் தொடக்கமாகும்.

--

லோகமான்ய பாலகங்காதாரத்திலகர் பாஞ்சால சிங்கம் லாலாலஜபதிராய் மகாத்மா காந்தி, விவேகானந்தர்

தாதாபாய் நெளரோஜி சிதம்பரம் - ஆகியோருடைய வீரத்தையும் தியாகத்தையும்

உயர்த்திப் பாராட்டிப் பாடுகிறார்.