பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதி பதிகளே நாட்டுக் கோட்டைச் செட்டிகளே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பலன் தரக்கூடிய கைங்கரியம். தெய்வத்தின் கருணைக்கும் பாத்திரமாக்கும் காரியம்.

‘பறையரை'பரை (அதாவது ஆதிசக்தி முத்துமாரி)யின் மக்கள் என்னும் பொருள் சொல்வதுண்டு. நமக்கு மண்ணுழுது நெல்லறுத்துக் கொடுக்கிறது ஜாதியாரை நாம் நேரே நடத்த வேண்டாமா? அது சரிதான். இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழி தேடிக் கொள்ளுங்கள். சென்னைப் பட்டணத்திலே நாலு பட்லர்கள் ஹிந்து மதத்தை உல்லங்கனம் செய்த போதிலம் நாட்டிலுள்ள பறையர் எல்லாரும் உண்மையான ஹிந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது. எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேகம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டு கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அவன் காத்தவராயசாமி விஷயமாகச் சில பாட்டுக்கள் சொன்னான். காத்தவராயன் என்பது வேகத்தில்ே சொல்லிய காற்று. வாயுக்கடவுளேயன்றி வேறில்லையென்று அந்தப் பாட்டுக்களினாலேயே தெரிந்து கொண்டேன். முத்துமாரி என்ற பாரசக்தியுடைய பிள்ளைதான் காத்தவராயன். பறையர்களும் நம்மைப் போலவே வைதீக தேவர்களை பூஜிக்கிறார்கள். மற்றொன்று சொல்லுகிறேன். --

‘அங்கமெலாங்குறைந்தழுகு தொழு

நோயராய் -

ஆவுரித்துத்தின்றுலும் புலையரேனும்

கங்கை வார்சடைக்காந்தார்க்

கன்பராயின்

அவர் கண்பீர் யாம் வணங்கும்

கடவுளாரே’ I

பறையர் ஹிந்துக்கள் அவர்களைக் கை தூக்கிவிட்டு மேல்நிலைக்கு கொண்டு வருதல் நம்முடைய தொழில் என்ற மகாகவி கூறுகிறார்.

பஞ்சமர்:

பறையருக்கெல்லாம் நல்ல சோறு, நல்ல படிப்பு முதலிய சவுக்கியங்களும் மற்ற மனுஷ்ய உரிமைகளும் ஏறுபாடு செய்து கொடுத்தல் நம்முடைய கடமை. சென்னைப்பட்டணத்தில் நாயர்கrக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பாரை அடிக்கும்படி தூண்டியதாகப்

139