பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகையில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்ராய பேதமிருள்தால் இதை ஜர்தி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிபிடி வரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் இந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள். இது நிற்க.

அடுத்த நவம்பர் பட்டணத்தில் பறையரை உயர்த்த வேண்டும் மென்கிற நோக்கத்துன்ை மகா சங்கம் நடத்தப் போவதாகக் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். முற்காலத்தில் நந்தனார் தோன்றியது போலவே, இப்போது மேற்படியார்குலத்தில் ஸஹஜாநந்தர் என்ற சந்யாசி ஒருவர் நல்ல பக்தராயும் ஸ்வாமிமானம் உடையவராகவும் தோன்றியிருக்கிறார். அவருடைய முயற்சிகளை முன்னுக்குக் கொண்டு வரும்படி உதவி செய்ய விரும்புவோர் கத்திபில் ஸ்ரீ கேசவப்பிள்ளை திவான் பகதுருக்கு எழுதி விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். மேற்படி ஸஹஜானந்தர் சிதம்பரத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் பறைப் பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக் கூடப் போட்டிருக்கிறார். அந்தப் பள்ளிக்கூட்ம் மே மாதம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு மண் கட்டிடம், கூரை வேய்ந்திருக்கிறார்கள். அதில் நானுறு பிள்ளைகள் வரை ஏற்கனவே சென்று படிக்கிறார்கள்.

தியஸ்ாபிக்கல் சங்கத்தார் சில பஞ்சம் பாடசாலைகளை ஏற்படுத்தி அந்த ஜாதியாரை மேன்மைப்படுத்தும் பொருட்டு மிகுந்த சிறத்தையுடன் உழைத்து வருகிறார்கள். ஸ்ரீ மதி அன்னி பெஸண்டுக்கு இந்த விஷயத்தில் ஏற்பட்டிருக்கும் அன்பும் உத்ஸாஹமும் மெச்சத்தகுந்தன.

பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஒளவை, திருவள்ளுவர். கபிலர், பரணர், உப்பை உறுவை வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்து போகவில்லை.

சிறிது காலத்துக்கு முன்பு ஒரு கிழச்சாம்பான் என்னிடம் வந்து, ‘முப்போதும் நீரில் மூழ்கிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்தில் இருப்பவரன்நோ இரு பிறப்பாளராவார்’ என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லப்பறையென்பது, ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகையென்றும், அதைக் கொட்டுவோன் பன்றையன் என்றும், பறையெஜ்பது சக்தியின் பெயரென்றும் அவளே ஆதியென்றும் சிவனே பகவான் என்றும் பிராமண ரூபம் கொண்டு அவருடன் வாழத்தான் என்றும், பறையர் மேம்பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருதி துடையவராய் ஹிந்துக்களுடைய விடுதலையிலும் மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்து வரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்ட ராயரும் சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதுக்கி விடுவதில் தம்மால்

140