பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயன்றவரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

‘ஊரர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

தன் பிள்ளைதானே வளரும்’

என்று மகாகவி பாரதியார் எழுதுகிறார்.

ஜாதிக் குழப்பம்

இந்தியாவில் விசேஷ கஷ்டங்கள் இரண்டு பணம் இல்லாதது ஒன்று. ஜாதிக் குழப்பம் இரண்டாவது பணக்கஷ்டமாவது வயிற்றுக்குப் போதிய ஆஹாரமில்லாத கொடுமை. இந்தத் துன்பத்துக்கு முக்கியமான நிவர்த்தியாதென்றால் நமது தேசத்தில் விளைந்து உணவுக்குப் பயன்படக் கூடிய தான்யங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாமல் தடுத்து விட வேண்டும். இங்கிலாந்து பதவிய தேசங்களில் காலையில் எழுந்தால் மீள்தென் அமெரிக்காவிலிருந்து வரும்படியாக இருக்கும் வெண்ணெய் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும்படியாக இருக்கும். இந்நாட்டினரின் நிலைமை அப்படியில்லை. இங்கு பூமி நம்முடைய ஜனங்களுக்கு எல்லாம் போதிய ஆஹாரம் கொடுக்கிறது. ஆதலால் ஏற்கனவே போதியஅளவு பணம் குவித்து வைத்திருந்தாலன்றி உணவுக்கு வழி கிடையாது, என்ற நிலைமை நம்முடைய தேசத்திற்கில்லை. உணவுத் தான்யங்களின் ஏற்றுமதியை எந்த நிமிஷத்தில் நிறுத்திவிடுகிறோமோ அந்த நிமிஷம் முதல் நம்முடைய ஜனங்களுக்குத் தட்டில்லாமல் யதேஷ்டமாக ஆஹாரம் கிடைத்துக் கொண்டு வரும். இந்த விஷயத்தில் ஜயமடைய வேண்டினால் நம்முடைய வியாபாரிகள் வெறுமே தம்முடைய வயிறு நிரப்புவது மாத்திரம் குறியாகக் கொள்ளாமல் தமக்குக் லாபம் வரும்படியாகவும் பொது ஜனங்களுக்கும் கஷ்டம் ஏற்படாமலும் செய்வதற்குரிய வியாபார முறைகளைக் கைக் கொள்ளும்படி அவர்களை வற்புறுத்த வேண்டும். இங்ஙனம் நம்முடைய நாட்டிலேயே தான்யங்களை நிறுத்திக் கொண்டு அந்தந்த ஊரில் மிக எளியோராக இருப்பவர்களிடம் தக்க வேலைகள் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உணவு வேண்டிய மட்டும் கொடுத்து வர ஏற்பாடு செய்தல் மிகவும் எளிது’ என்று மகாகவி பாரதியார் எழுதுகிறார்.

பூரி (ஜகந்நாதம்) பிரதேசங்களில் மிகவும் கொடிய பஞ்சம் இந்த கூ#ணத்தில் நடைபெற்று வருகிறது. நம் நாட்டில் ராஜாக்களும் சாஸ்திரிகளும் பெரிய மிராசு தார்களும் ஸாஹ-கார்களும் வியாபாரிகளும் வக்கீல்களும் பெரிய பெரிய உத்தியோகஸ்தர்களும் வயிறு கொழுக்க, விலாப்புடைக்க அஜீர்ணமுண்டாகும்படி ஆஹாராங்களைத் தம்முள் திணித்துக் கொண்டிருக்கையிலே உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாதபடி இந்தியாவில் மட்டும் தீராத மாறாத பஞ்சம் தோன்றி ஜனங்களை அழிக்கிற கொடுமையைத் தீர்க்க வழி தேடவேண்டிய யோசனை

141